ஆயுத பூஜை பொரி விலையும் உயருதா? 1 படி ரூ.10? அரிசி தட்டுப்பாடு.. அரசு, கூட்டுறவு சங்கம் எடுத்த ரூட்

  • சென்னை: ஆயுத பூஜைக்கு பொரி வாங்கப் போறீங்களா? இந்த வருஷம் பொரி விலை கொஞ்சம் எகிற வாய்ப்பிருக்கிறது.. ஏற்கனவே அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அரிசி விற்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.. இப்படி அரிசி விலையே தலைசுற்ற வைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், ஆயுத பூஜை பொரி விலையிலும் என்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா?

    Advertisement

    தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்ற சன்ன ரக அரிசி, இப்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.. அரிசி மட்டுமல்லாமல் பருப்பு, சமையல் எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால், குடும்ப பட்ஜெட்டைச் சமாளிக்கவே மக்கள் சிரமப்படுகிறார்கள்..

    Advertisement

    இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.. இதற்காக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் விலை கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.. தலைமைச் செயலாளர் சாய்குமார், உணவுத்துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்..

    கூட்டுறவு கடைகளில் குறைந்த விலை அரிசி

    வெளிச்சந்தையில் அரிசி விலை அதிகமாக இருப்பதால், கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அரிசி விற்றால் மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும் என்று அரசு ஆலோசித்து வருகிறது.. இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது..

    Advertisement

    இதற்காக ஒரு லட்சம் டன் அரிசி கிடைக்குமா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு அரிசி கிடைக்கும் என்ற விவரங்களைச் சேகரித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.. அதாவது, குறைந்த விலை அரிசி விற்பனை இன்னும் ஆலோசனை நிலையில்தான் இருக்கிறது..

    விஜய் காஸ்டியூமில் தெரிந்த 'V' மாற்றம்.. இதை கவனிச்சீங்களா! முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலக்கல்!

    ஆயுத பூஜை பொரி விலை உயருதா?

    வரும் 19-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதால், இப்போதே பொரி தயாரிக்கும் வேலைகள் சூடுபிடித்துள்ளன.. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மட்டும் தினமும் சுமார் 3,000 மூட்டை பொரி தயாரிக்கப்படுகிறது.. இரவு, பகல் பார்க்காமல் தொழிலாளர்கள் பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

    Advertisement

    இங்கு தயாராகும் பொரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.. குறிப்பாக சேலம், வேலூர், ஈரோடு, சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பொரி அனுப்பப்படுகிறது..

    இந்த வருடம் பொரி விலை உயர வாய்ப்பிருப்பதற்கு முக்கியக் காரணம், அதற்கு பயன்படுத்தப்படும் அரிசியின் விலைதான்.. பொரி தயாரிக்க பயன்படும் அரிசி வடமாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது.. முன்பு கிலோ ரூ.33-க்கு கிடைத்த இந்த அரிசி, இப்போது தட்டுப்பாடு காரணமாக ரூ.43 ஆக உயர்ந்துள்ளது.. எல் நினோ தாக்கத்தால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலையுடன் சொல்கிறார்கள்.

    Advertisement

    இதனால் பொரி தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.. தற்போது 100 லிட்டர் அளவுள்ள ஒரு மூட்டை பொரி ரூ.380-க்கு விற்கப்படுகிறது.. சில்லறைக் கடைகளில் ஒரு படி பொரி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

    அதிர வைக்குது அரிசி.. பதற வைக்கும் பருப்பு விலை! அசட்டாய்ப் பேசிய தவெக அமைச்சர்! பறந்த கண்டனம்!

    டல்லடிக்கும் பொரி தயாரிப்பு

    போதாக்குறைக்கு. கடந்த ஒரு வாரமாக காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொரி தயாரிப்புப் பணிகளும் டல்லடித்து வருகிறதாம்.. ஆயுத பூஜை நெருங்கும் நேரத்தில் பொரிக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், உற்பத்தியாளர்கள் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்..

    Advertisement

    ஆனால், அரிசி விலை உயர்வு, மூலப்பொருள் தட்டுப்பாடு, தயாரிப்பு செலவு அதிகரிப்பு என எல்லாமே சேர்ந்து இந்த வருடம் பொரி விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.. ஆயுத பூஜைக்கு பொரி வாங்க கடைக்கு போகும்போது, கடந்த வருட விலையிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது..!!

    English Summary

    Ayudha Puja Pori Price Hike? Rice Shortage, Rs 10 per Measure and Government Cooperative Store Plan