ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்! போன வருஷம் மாதிரி இல்லை.. கடைத்தெருக்களில் டல் அடித்த கூட்டம்!

  • சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் சூடுபிடித்திருக்கிறது. நேற்றிரவு கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. இருப்பினும் வியாபாரம் பெரிய அளவுக்கு இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

    Advertisement

    நவராத்திரியின் 9வது நாளான இன்று கோயில்களில சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடங்களும் களைகட்டியுள்ளன.

    Advertisement

    புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து நவராத்திரி விழா தொடங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்.11ம் தேதியிலிருந்து நவராத்திரி விழாக்கள் தொடங்கின. குறிப்பிட்ட சில சமூக மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விழாவை தொடங்குவார்கள். அந்த வகையில் 9வது நாளான இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அதேபோல வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பொரி, கடலை, சுண்டல், பொங்கல், பழங்கள், அவல் வைத்து படையல் போட்டு வழிபாடு செய்வார்கள். இதற்காக நேற்று மாலை மதியம் தொடங்கி நள்ளிரவு வரை கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Advertisement

    சென்னையின் பாரிஸ் கார்னர் பகுதியில் நடந்து போக கூட முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே சமயம் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், கடந்த ஆண்டை போல.. இந்த ஆண்டு வியாபாரம் பெரியதாக இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

    விலைவாசி உயர்வு, போதுமான வருமானம் இல்லாதது, RBI வட்டி உயர்வால் EMI அதிகரிக்கப்பட்டது போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் செலவுகளை குறைத்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்றும், இதை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

    Topics: #tamil nadu

    English Summary

    Across Tamil Nadu, the celebrations for Ayudha Puja and Saraswati Puja are in full swing today. There were large crowds in the marketplaces last night; however, traders report that business has not been particularly brisk.