மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி

  • சென்னை: பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளன்று மாடு பலியிடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ஷாஜஹான் உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    பொது இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பது இஸ்லாமியர்களை மட்டுமல்லாது, கோயில்களில் ஆடுகளை வெட்டும் இந்துக்களையும் பாதித்திருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்திருந்தனர்.

    Advertisement

    என்ன வழக்கு?

    கோயம்புத்தூரைச் சேர்ந்த கே. சூர்ய பிரஷாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் ஆவார். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின்போது கோவையின் செல்வபுரத்தில் தகரக் கொட்டகைகள் அமைத்து மாடுகள் வெட்டப்பட்டதாக தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் தலையிட்டு ஏழு மாடுகளை மீட்டனர். இந்த ஆண்டு மே 28 அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கோவை துடியலூர் சந்தை, உக்கடம், ரத்தினபுரி மசூதி, செல்வபுரம், குனியமுத்தூர், போத்தனூர் உட்பட பல இடங்களில் மாடுகள் வெட்டப்படலாம் என தனது மனுவில் அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    மாடுகளை வெட்ட தடை

    அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை விதிக்க வேண்டும். மேலும், வெட்டப்படும் மாடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா, கன்றுக் குட்டிகள் வெட்டப்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

    நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

    இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை விதித்திருந்ததை சுட்டிக்காட்டினர். மேலும், தமிழக அரசும் 1976ஆம் ஆண்டிலேயே பசுவதையை தடை செய்து ஒரு அரசாணையைப் பிறப்பித்திருந்தது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    Advertisement

    அதிரடி உத்தரவு

    மேலே குறிப்பிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், பக்ரீத் பண்டிகையின்போது மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட எந்த விலங்குகளையும் வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டனர். பொது இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரவால் சர்ச்சை

    இந்த உத்தரவு பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்புகளை கிளப்பியிருந்தது. ரீத் பண்டிகையின்போது மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட எந்த விலங்குகளையும் வெட்டக்கூடாது என்று சொன்னால், ஊர் திருவிழாக்களில் ஆடு வெட்ட முடியாதா?

    Advertisement

    எல்லோருக்கும் பாதிப்பு?

    ஊர் திருவிழாவின்போது ஒவ்வொரு தெருவுக்கும், ஏன் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஆடு வெட்டப்படும். அது மதம் சார்ந்த சடங்கு. சாமிக்கு வேண்டிய கடனை நிவர்த்தி செய்ய ஆடு வெட்டப்படும். அப்படியெனில், இனி ஆடு வெட்ட முடியாதா? என்று கேள்வி எழுந்தது. எனவே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

    இப்படி இருக்கையில், உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியிருக்கிறார்.

    மேல் முறையீடு

    "பக்ரீத்திற்கு முதல் நாள் அவசர அவசரமாக இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்கேயும் யார் மீதும் வழக்கு தொடுக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் அந்த வழக்கை நீக்குவதற்கு தயாராக இருக்கிறோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தோ, சட்ட திருத்தம் செய்தோ, அரசாணை வெளியிட்டோ மாற்றங்கள் கொண்டு வருவோம். கடந்த அரசை காட்டிலும் இந்த முறை சிறுபான்மையினர் நலத் துறைக்கு இரண்டு மடங்காக நிதி ஒதுக்கப்படும்" என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

    Topics: #tvk #vijay #court

    English Summary

    Cattle Sacrifice: The Madras High Court had issued a significant order regarding the slaughter of cattle on the eve of the Bakrid festival. Amidst the intense debates sparked by this ruling, Minister Shahjahan has given an assurance that an appeal will be filed challenging the order.