வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால்? பணத்தை பெற குடும்பத்தினர் என்ன செய்யணும்? குட் நியூஸ்

  • சென்னை: வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அடுத்து குடும்பத்தினருக்கு பல சந்தேகங்கள் எழக்கூடும்.. முக்கியமாக, அவர் வங்கியில் வைத்திருந்த பணத்தை எப்படி எடுப்பது? யாரை அணுகுவது? அதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? இதற்காக வங்கிக்கு பலமுறை அலைய வேண்டுமா? என்றெல்லாம் கவலையும், குழப்பமும் இருக்கும்... இப்போது இதற்கான நடைமுறையைதான், ரிசர்வ் வங்கி எளிமையாக விளக்கியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    ஒருவர் இறந்துவிட்டதால், அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அப்படியே முடங்கிப்போய்விடாது. அதற்கு உரிமை கோருவதற்கான சில நடைமுறைகள் உள்ளன..

    Advertisement

    குடும்பத்தினர், நாமினி அல்லது உரிமை கோர தகுதியுள்ளவர்கள் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதற்கு பெரிய சிக்கல் எதுவும் இல்லை. இதற்கான நடைமுறையைத்தான் ரிசர்வ் வங்கி இப்போது எளிதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுடனும் மாற்றியிருக்கிறது.

    வங்கி அக்கவுண்ட்

    இதற்கு முதலில் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்கு செல்ல வேண்டும்.. சில வங்கிகளில் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலமாகவும் இந்த செயல்முறையை தொடங்க முடியும்... அங்கு தரப்படும் உரிமை கோரும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்... அதன் பிறகு, வங்கி கேட்கும் தேவையான ஆவணங்களுடன் அந்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்..

    Advertisement

    அதாவது வங்கி கிளை அல்லது வெப்சைட் மூலம் தொடங்குவது, படிவத்தை நிரப்புவது, அதற்கு தேவையான ஆவணங்களை கொடுப்பது என 3 முக்கியமான படிகள் உள்ளன.

    15 நாட்கள் அவகாசம்

    இதில் குடும்பத்தினருக்கு நிம்மதி தரும் இன்னொரு தகவலும் இருக்கிறது... தேவையான கோரிக்கையும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, இந்த கோரிக்கையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது..அதாவது, பணத்தை பெறுவதற்கான கோரிக்கை கொடுத்துவிட்டு, எப்போது முடியும் என்று நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

    அதேசமயம், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே செய்ய நாமினி பெயரை பதிவு செய்வதும் முக்கியம்.. வங்கிக் கணக்கில் நாமினி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்தக் கணக்கில் உள்ள பணத்தை பெறுவதற்கான நடைமுறை இன்னும் எளிதாகவும் விரைவாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    Advertisement

    நாமினி பெயர் அவசியம்

    அதனால், நாமினி பெயர் ஏற்கனவே போட்டுவிட்டோமே என்று அப்படியே விட்டுவிடக்கூடாது. வங்கிக் கணக்கில் பதிவு செய்திருக்கும் நாமினியின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் அடிக்கடி செக் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஏதாவது மாற்றம் இருந்தால், அதை புதுப்பித்து வைத்துக்கொள்வது நல்லது. இப்படி செய்வது, எதிர்பாராத நேரத்தில் குடும்பத்தினர் வங்கிப் பணத்தை பெறும்போது தேவையில்லாத சிரமங்களை, அலைச்சல்களை தவிர்க்க உதவும்.

    பணத்தை வங்கியில் சேமித்து வைக்கிறோம், ஆனால், நமக்கு ஏதாவது நடந்தால் அந்தப் பணத்தை குடும்பத்தினர் எப்படி பெறுவார்கள் என்பதை பெரும்பாலானோர் முன்கூட்டியே யோசிப்பது குறைவு. அதனால்தான் ரிசர்வ் வங்கியே இந்த விஷயத்தை வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டுகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கி இதுதொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவும் தெரிவித்து வருகிறது.

    Advertisement

    எனவே, உங்கள் வங்கிக் கணக்கில் நாமினி பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அந்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை இப்போதே பார்த்துக்கொள்ளுங்கள். நம்மை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு நாளை ஒரு சின்ன விஷயம் கூட பெரிய சிக்கலாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு அலர்ட் ஆரம்பமாகி உள்ளது..!!!

    English Summary

    Bank Account Holder Dies.. What Should a Family Do to Claim Money? RBI Good News