சென்னையில் ஒரே பொய்யில் 44 லட்சம் சம்பாத்தியம்.. தனியார் நிதி நிறுவன மேலாளர் சிக்கியது எப்படி?

  • சென்னை: குரோம்பேட்டை தனியார் நிதி நிறுவனத்தில் 411 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அவற்றை மீட்டு தங்கள் நிறுவனத்தில் அடகு வைக்க வேண்டும் என்று கூறி வந்த பெண்ணால் திருவெற்றியூர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பகுதி மேலாளராக உள்ள அரவிந்த் என்பவர், திருவொற்றியூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறுகையில், 24 வயதாகும் காயத்ரி என்ற பெண், குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 411 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அவற்றை மீட்டு தங்கள் நிறுவனத்தில் அடகு வைக்குமாறும் கூறினார். இதனை நம்பிய அப்போதைய கிளை மேலாளர் பிரவீன்குமார் (25), அடகு ரசீது மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, நிறுவனத்தின் அனுமதியுடன் ரூ.44.67 லட்சத்தை காயத்ரி தெரிவித்த தனியார் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஆனால், காயத்ரி தங்க நகைகளை ஒப்படைக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன்குமாரும் காயத்ரியும் கூட்டுச்சேர்ந்து பணத்தை அனுப்பியதும், பின்னர் அந்தப் பணம் ராதாகிருஷ்ணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட காயத்ரி, பிரவீன்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். காயத்ரி மீது ஏற்கனவே வண்ணாரப்பேட்டை போலீசில் மோசடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள ராதாகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதியில் அணிந்திருந்தது தங்க காசு மாலையா? விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி

    சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. வீடு வாங்க ஆசைப்பட்டவரிடம் ரூ.2 கோடி பணத்தையும், 93 சவரன் தங்க நகைகளையும் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் கோமளவள்ளி என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறுகையில், "செங்கல்பட்டை சேர்ந்த யாஸ்மீன் (32), அவரது கணவர் விவேக் (34) ஆகியோர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக கூறியும், ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருக்கும் தாமிரா அடுக்குமாடி குடியிருப்பிலும் வீடுகள் வாங்கி தருவதாகவும் இவர்கள் இருவரும் ரொக்கமாக முன்பணம் வாங்கியிருக்கிறார்கள்.

    Advertisement
    ரேஷன் கடைகளில் பாமாயில் நிறுத்தம்.. தீபாவளி நெருங்கும் நிலையில் பரிதவிக்கும் மக்கள்

    மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக கூறியும் இவர்கள் பணம் வசூலில் ஈடுபட்டார்கள். எனது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். மருத்துவ கல்லூரியில் 'சீட்டும்' வாங்கி தரவில்லை, ரூ.12 லட்சத்தையும் திருப்பி தரவில்லை. இதேபோல, வீடுகள் வாங்கி தருவதாக கூறி மாரிமுத்து, தாஹிரா மற்றும் கவுரவ் ஆகியோரிடம் ரூ.2 கோடியும், 93 கிலோ தங்க நகைகளையும் வாங்கி ஏப்பம் போட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்" இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

    Advertisement

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மோசடிநபர்களான யாஸ்மீனும், அவரது கணவர் விவேக்கும் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவல் அடிப்படையில், தினேஷ் சவுத்ரி (29) மற்றும் அவரது தந்தை தேஜா ராம் (49) ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    English Summary

    A fraud amounting to Rs 44.67 lakh has been perpetrated at a private finance firm in Thiruvottiyur by a woman who claimed to have pledged 411 grams of gold jewellery at another private finance firm in Chromepet and suggested that these items be redeemed and pledged with her firm instead. In connection with this case, the police have arrested a woman and the former branch manager of the firm.