வங்கி மேனேஜரின் கன்னத்தில் பளார் அறை.. முக அழகிரி மகள் கயல்விழி மீது போலீஸில் புகார்

  • சென்னை: முன்னாள் அமைச்சர் முக அழகிரியின் மகள் கயல்விழி சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கி மேனேஜரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கயல்விழி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னை, அடையாறில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் என்ஆர்ஐ கிளை மேலாளராக ஹர்ஷீன் சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தக் கட்டடத்தில் உள்ள லிப்டில் பழுது ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இதையடுத்து, லிப்ட் பழுது குறித்து கூறுவதற்காக கயல்விழியின் உதவியாளரை தொடர்பு கொள்ள வங்கி மேனேஜர் ஹர்ஷீன் சிங் முயற்சி செய்துள்ளார்.
    ஆனால், அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஹர்ஷீன் சிங் கயல்விழியைத் தொடர்பு கொண்டு லிப்ட் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, கயல்விழி வங்கி கிளைக்கு நேரடியாக வந்துள்ளார். அப்போது, மேனேஜரிடம் தனக்கு போன் செய்தது தொடர்பாக கயல்விழி கோபத்தோடு கேள்வி கேட்டுள்ளார். அப்போது, வங்கியின் மேனேஜர் தன்னுடைய இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கயல்விழி மேனேஜரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

    Advertisement

    இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், வங்கி மேனேஜரை தாக்கிய கயல்விழி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அந்த வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

    English Summary

    An incident in which Kayalvizhi, daughter of former minister M.K. Alagiri, slapped the manager of an SBI branch in Adyar, Chennai, has caused a stir. A police complaint has been filed against her regarding the incident.