இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை? தீயாய் பரவிய செய்தி! மத்திய அரசு கொடுத்த விளக்கம்!

  • சென்னை: தற்போது மாதத்தின் இரண்டு சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கூறி வங்கிகள் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வங்கிகளுக்கும் சனிக்கிழமைகளில் விடுமுறை என சமூக ஊடகங்களில் தகவல் பரவி நிலையில் அதனை மத்திய அரசு மறுத்துள்ளது.

    Advertisement

    தற்போது 2 சனிக்கிழமைகளில் மட்டும் வங்கிகள் செயல்படுகிறது. இதனால் மாதத்தில் 2 வாரங்கள் வங்கி ஊழியர்கள் 6 நாட்கள் வேலைக்கு வர வேண்டி உள்ளது. இந்நிலையில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்தன.

    Advertisement

    அதன்படி, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான United Forum of Bank Unions அழைப்பு விடுத்தது. இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

    வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை, செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை திட்டத்தில் மாற்றம், நிலுவையில் உள்ள இதர கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக இருந்த நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் வங்கிகள் வழக்கம் போல இயங்கின.

    Advertisement

    டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அரசாணை ஒன்று அதிகமாக பகிரப்பட்டது. அதில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்பட்டதாக பொய்ச் செய்தி பரவியது. இதனை தெரிந்து கொள்ளாமல் சில முன்னணி ஊடகங்களே அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.

    இந்த நிலையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என மத்திய அரசு பணிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுத் துறை வங்கிகளுக்கு சனிக்கிழமைகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக எந்த ஒரு அறிவிப்பையும் நிதி அமைச்சகம் வெளியிடவில்லை. நாடு முழுவதும் மாதத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் நிலையில் அதே நடைமுறை தொடரும். தற்போது வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    English Summary

    Centre denies reports of Saturday holidays for public sector banks, confirming second and third Saturdays remain holidays.