சென்னை: 150 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு உணவின் மூலமே தீர்வு காண முடியும் என்றும், டயாபட்டீஸ், பிபி உள்ளிட்ட பல நோய்களுக்கும் உணவின் மூலமே தீர்வு காண முடியும் என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அமுரா ஏஐ நிறுவனர் சரவணன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
உடம்பை ஹெல்தியா வைத்து இருக்க கூடிய சக்தி எல்லோருக்கும் உள்ளது. சில சமயம் அது கம்மியா இருக்கும். அதை சரி செய்தாலே போதும். உடம்பை வலுவாக்கி நோய்களை விரட்ட முடியும் என்கிறார் அமுரா ஏஐ நிறுவனர் சரவணன் பாலகிருஷ்னண். சில எளிதான விஷயங்களை செய்ய முடியும். அதை நாங்கள் செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
டயாபட்டீஸ்க்கும் உடலில் சேரும் கொழுப்புக்கும் உள்ள நேரடி தொடர்பு, அதை எப்படி உணவின் மூலமே சரி செய்ய முடியும் என்பது பற்றிய விவரங்களை விரிவாக பேசியுள்ளார் சரவணன் பாலகிருஷ்ணன். ஒன் இந்தியா யூடியூப் சேனலில் சரவணன் பாலகிருஷ்ணன் பேட்டியை விரிவாக பார்க்கலாம். அவர் கூறியதன் சில விவரங்கள்:- தலைவலி வந்தால் தலைவலிக்கு மாத்திரை கொடுக்கிறோம். வலி மட்டும் நிறுத்துறோம் என்று இல்லாமல் ஏன் தலைவலி வந்தது. உடம்பில் என்ன கெட்டுப்போச்சு.. என்ன மாற்றி வைத்தால் உடல் நலமாகும். ஹெல்தியாக மாறினால் தலைவலி நிற்கும் என்று பார்த்து செய்கிறோம். மூலக்காரணம் என்று சொல்வார்கள். அதை பார்த்து செய்வதால் எங்களுக்கு நல்ல ரிசல்ட்கள் கிடைக்கிறது. தேவைக்கு அதிகமாக சாப்பிடும் போது கொழுப்பு உருவாகிறது. பட்டினி கிடக்கும் போது, அந்த கொழுப்பு கரைந்து உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். ஆனால் இப்போது யாரும் பட்டினியாக இருப்பது இல்லை. கொழுப்பு சேர்ந்து கொண்டே இருக்கிறது. உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புதான் நிறைய பிரச்சினைகளை உருவாக்குகிறது. நீரிழிவை உருவாக்குறது. பிபியை உருவாக்குகிறது. கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது. உண்ணா விரதம் இருப்பதும் நல்லதும். தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் இருக்க கூடாது. தேவையான அளவு மட்டும் இருக்க வேண்டும்.எது தேவைக்கு அதிகமான கொழுப்பு என்றால் வயிற்றில் கொழுப்பு வந்தால் தேவைக்கு அதிகமான கொழுப்பு என்று அர்த்தம். கையில் இருந்தால் தப்பு இல்லை. வயிற்றில் கொழுப்பு எப்பொது சேர ஆரம்பிக்கிறதோ அப்போது தேவைக்கு அதிகமான கொழுப்பு என்று அர்த்தம். 90 சதவீதம் மக்களுக்கு இப்படிதான் இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து நீரிழிவு ஆகும்.. பல பிரச்சினைகள் 10 வருடம், 15 வருடம் ஆகும்' என்றார். இதை எப்படி சமாளிப்பது உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி தெளிவாக கூறியுள்ளார்.தலைவலி ஏன் வருகிறது?
உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது