சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே பெரிய அளவுக்கு உதவும். இப்படி இருக்கையில் தமிழக பகுதியில் நடைபெற வேண்டிய சாலை பணிகளில் ஒரு பகுதி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த எக்ஸ்பிரஸ்வே மொத்தம் 261.7 கி.மீ நீளம் கொண்டதாகும். சாலையின் கட்டுமான பணிகள் 10 பகுதிகளாக நடைபெற்று வந்தன. இதில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரை, அரக்கோணம் தொடங்கி காஞ்சிபுரம் வரையிலான 25.5 கி.மீ நீளம் கொண்ட சாலை பணிகள் கடந்த ஆண்டு மே மாதமும் முதல் மேற்கொள்ளப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பகுதியில் பணியாற்றிய ஒப்பந்த நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்படி நிறுத்தி வைத்ததால், சாலை பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை என்று கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து ஒப்பந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட.. நீதிமன்றமும் ரத்து உத்தரவை நிறுத்தி வைத்தது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் கடன் வழங்கும் வங்கிகள், பழைய ஒப்பந்த நிறுவனத்திற்கு பதில் புதிய ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய தொடங்கியிருக்கின்றன. ஏற்கெனவே கர்நாடாகா, ஆந்திராவில் பணிகள் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டன. கர்நாடாவில் ஏறத்தாழ அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆந்திராவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பணிகள் நிறைவடைய வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் வாலாஜாவிலிருந்து அரக்கோணம் வரையிலான சாலை கட்டுமான பணிகள், காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பணிகள் முடிவடைய உள்ளன. இப்படி அனைத்து பகுதிகளும் முடிவு கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நேரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவால்.. ஒரே ஒரு பகுதியில் மட்டும் பணிகள் அப்படியே பெண்டிங் இருக்கிறது. எனவே நீதிமன்றம் இந்த விஷயத்தில் சீரியஸாக தலையிட்டு எப்படியாவது முடிவு காண வேண்டும் என்றும்.. சாலை பணிகள் அதே வேகத்தில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவால் பணிகள் நிலுவையில் இருப்பதை தவிர, மற்ற காரணங்களுக்காகவும் தமிழகத்தில் 4 தொகுப்புகளில் பணிகள் தாமதமாகியிருந்தன. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதம், மின்சார உட்கட்டமைப்புகள் மற்றும் உயர் மின்னழுத்த மின் கோபுரங்களை இடமாற்றம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், ரயில்வே மின் பாதைகள் தொடர்பான அனுமதி ஆகியவற்றால் பணிகள் தாமதம் ஆகியது. இருப்பினும் இதில் பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.நிதி நெருக்கடி
மற்ற மாநிலங்களின் நிலை
நீதிமன்ற உத்தரவு
மற்ற காரணங்கள்