பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலய திருவிழா.. இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

  • சென்னை: சென்னை பெசன்ட்நகா் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் திருவிழா சனிக்கிழமை (இன்று) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி, 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பெசன்ட்நகா், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் திருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 29 ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து நற்கருணை தோ் ஊா்வலம் நடைபெறுகிறது.

    Advertisement

    போக்குவரத்து மாற்றம்

    இதேபோன்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஊா்வலம் நடைபெறுகிறது. செப்டம்பா் 7-ஆம் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தோ் பவனி நடைபெறுகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகஸ்ட் 29, செப்டம்பா் 7, 8 ஆம் தேதிகளில் பெசன்ட்நகா் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    பார்க்கிங் வசதி

    திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பெசன்ட் நகா் 2வது பிரதான சாலை, பெசன்ட் நகா் 4-வது அவென்யு, பெசன்ட் நகா் 17வ-து குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Besant Nagar Velankanni Church festival begins today with flag hoisting, with traffic diversions and designated parking facilities arranged in the area for devotees.