பரந்தூருக்கு பதில்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. செங்கல்பட்டு அருகே இரண்டு மாற்று வழிகள்

  • சென்னை: பரந்தூருக்கு பதில் புதிய விமான நிலையத்தை பொறுத்தவரை அரசுக்கு உள்ள இரண்டு மாற்று வழிகளை பார்ப்போம். முதல்வர் விஜய் எதிர்பார்ப்பது போல் குறைந்த நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும், தரிசு நிலங்கள் அதிகமாக உள்ள இடமாகவும் இருக்க வேண்டும் என்றால் பையனூர் - செங்கல்பட்டு இடைப்பட்ட பகுதியிலோ அல்லது செய்யூர் - மதுராந்தகம் வழித்தடத்திலோ உள்ள தரிசு நிலப் பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது தான், சுற்றுச்சூழல் சேதத்தையும் குறைத்து வான்வெளிச் சிக்கல்களையும் தவிர்க்க உதவும் என்கிறார்கள். இதில் செய்யூர் மதுராந்தகம் வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    Advertisement

    பையனூர் - செங்கல்பட்டு வழித்தடம்

    கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மகாபலிபுரம் சாலைக்கும், நடுவே அமைந்திருக்கும் பையனூர் - செங்கல்பட்டு வழித்தடம் பசுமையான நிலம் அதிகம் கிடையாது. திருக்கழுக்குன்றம் மற்றும் செய்யூர் தாலுகாவில் வறண்ட மேட்டு நிலங்களும், பாறை நிறைந்த புன்செய் தரிசு நிலங்களும் மிக அதிக அளவில் இருக்கிறது.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி, நாவலூர், சோழிங்கநல்லூர், தரமணி, பெருங்குடியில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் இருந்து வெறும் வெறும் 30 முதல் 40 நிமிடங்களில் எளிதாக போய்விட முடியும்

    ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால், அதனுடைய பாதுகாப்பு வான்வெளி எல்லைக்குள் ரன்வே வராதபடி மிக கவனமாக ரன்வே மற்றும் வான்வெளி பாதையை அமைக்க வேண்டும். கடலோரக் கட்டுப்பாட்டு மண்டல விதிகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

    இரண்டாவது வழித்தடம் செய்யூர் - மதுராந்தகம்

    தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை நிலம் இல்லை.. ஆனால்
    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செய்யூர் - மதுராந்தகம் இடையே ஏராளமான
    தரிசு நிலம் உள்ளது . அங்கு பெரிய ஏரிகளோ, அடர்ந்த விவசாய நிலங்களோ இல்லை.‌எனவே போராட்டங்களுக்கு வாய்ப்பே கிடையாது..

    Advertisement

    அது மட்டுமல்ல பக்கத்திலேயே தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான ரயில் பாதை போகிறது .‌எனவே புதிதாக ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷன்' அமைத்து அதிவேக விரைவு ரயிலை இயக்கலாம்.

    கிளாம் பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மேம்பாலம் அமைத்து ஹைதராபாத் பாணியில் விமான நிலையம் வரை பஸ் பே அமைத்து இரு சக்கர வாகனம் செல்ல தடை விதித்து அதிவேகமாக செல்ல வழி வகை செய்யலாம். இதன் மூலம் தாம்பரத்தில் இருந்து வெறும் 40 நிமிடங்களில் போய்விடலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து 1.30 மணி நேரத்தில் போய்விடலாம் ‌. சென்ட்ரலில் இருந்து சுமார் 65 கிமீ தூரத்தில் இந்த இடம் இருக்கும்.

    Advertisement

    பரந்தூரின் நீர்நிலைகளைக் காப்பாற்றவும், மக்கள் போராட்டங்களைத் தவிர்க்க இந்த இரண்டாவது இடத்தை தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் விமான நிலையம் வரை பஸ் பே அமைப்பதாக இருந்தால் தான் சாத்தியம்.

    English Summary

    Kill Two Birds with One Stone: Why Chengalpattu Outshines Parandur for Chennai’s 2nd Airport