சென்னை: தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களில் முக்கியமானவரான பாக்யராஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநராக, கதாசிரியராக, நடிகராக பணியாற்றிய அவரை மொத்த தமிழ் சமூகமும் கொண்டாடி தீர்த்திருக்கிறது. இந்நிலையில், அவரது மறைவையொட்டி.. திரைத்துரையில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் நினைவு கூறப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நகைச்சுவை கலைஞர் கவுண்டமணியின் பெயர் காரணம் மற்றும் ஊர்வசி உள்ளிட்ட நடிகைகளின் சினிமா என்ட்ரிக்கு பாக்யராஜ்தான் காரணம். இது தொடர்பான நினைவுகள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.
கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. நாடக கலைஞராகத்தான் இவர் தனது வாழ்க்கையை தொடங்கியிருந்தார். நாடகத்தில் இவருக்கு தனி பெயர் இருந்தது. அதாவது யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கவுண்டர் கொடுப்பதால் இவருக்கு கவுண்டர் மணி என்று பெயர் இருந்தது. இப்படி இருக்கையில், 16 வயதினிலே திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பாக்யராஜ் வாய்ப்பு வாங்கி கொடுத்திருந்தார். அப்போது அவரது பெயரை கவுண்டர் மணி என்பதற்கு பதில், தவறுதலாக கவுண்டமணி என்று குறிப்பிட்டிருந்தார். இதை பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக அவரது பெயர் கவுண்டமணி என்றே நிலைத்துவிட்டது. அதன் பின்னர் வந்த சினிமாக்களில் கவுண்டமணி என்றே அவரது பெயர் நிலைத்துவிட்டதால் அதையே அவர் ஏற்றுக்கொண்டார். அதேபோல நடிகை ஊர்வசியின் சினிமா பயணத்திற்கும் பாக்யராஜ்தான் காரணம். ஊர்வசியை 13 வயதில் சினிமாவுக்கு அழைத்து வந்தார் பாக்யராஜ். அவர் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசி நாயகியாக பரிமளம் என்கிற கேரக்டராக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சுமார் 25 வாரங்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. மொத்தமாக இந்த படம் ரூ.4 கோடி வரை வசூலை பெற்றது. அதேபோல ஊர்வசியின் சகோதரியான சிறந்த துணை நடிகையாக அறியப்பட்ட, கல்பனாவை அறிமுகப்படுத்தியதும் பாக்யராஜ்தான். 1985ல் வெளியான சின்னவீடு என்கிற திரைப்படத்தின் மூலம் கல்பனா அறிமுகமானார். இவர்களை தவிர, பாக்யராஜ் தனது முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் என்கிற திரைப்படத்தில் ரதி அக்னிஹோத்ரி, பாமா ருக்மணி படத்தின் மூலம் நடிகை பிரவீனா ஆகியோரையும் இவர் அறிமுகப்படுத்தியிருந்தார். பாக்யராஜின் குரு சினிமாவை எப்படி, ஸ்டூடியோக்குள் இருந்து வெளியில் கொண்டு வந்தாரோ.. அதேபோல, பாக்யராஜ் ஹீரோயிசம் என்பதற்கான வரையறையை மாற்றியமைத்தார். முன்பெல்லாம் ஹீரோ என்றால்.. அவர் கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்டவராகத்தான் இருந்தார்கள். ஆனால், பாக்யராஜ் சாமானிய மனித கேரக்டர்களை ஹீரோவாக மாற்றி அசத்தினார். அப்பேர்பட்ட சினிமா காதலர் பாக்யராஜ் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கவுண்டமணி பெயர் காரணம்
ஊர்வசி அறிமுகம்
கல்பனா அறிமுகம்
ஹீரோயிசத்தை மாற்றிய பாக்கியராஜ்