பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை

  • சென்னை: தனது மகன் மனோஜ் இறந்தது முதல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளாமல் தனக்கு வாழவே பிடிக்கவில்லை எனக் கூறி பாரதிராஜா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொக்கலிங்கம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் உணவு உண்ணாமலும் மருந்து மாத்திரை சாப்பிடாமலும் வேண்டுமென்றே தனது உயிரை விட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொக்கலிங்கம் கலாட்டா சானலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாரதிராஜாவுக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் (BP) இருந்தது. எல்லா விஷயங்களிலும் சரியாக இருப்பார். நேரத்திற்கு சாப்பிடுவார், மருந்துகளை தவறாமல் உட்கொள்வார்.

    Advertisement

    சிகரெட் பிடிப்பதை கூட உடல்நலனை கருத்தில் கொண்டு விட்டுவிட்டார். ஆனால் கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் இறந்தது அவருக்கு பேரிடியானது. புத்திர சோகம் என்பது எந்த தாய் தந்தைக்கும் வரக் கூடாது. ஆனால் பாரதிராஜாவுக்கு வந்துவிட்டது.

    அவரது மகன் இறந்தது முதல் மருந்துகளை உட்கொள்வதை பாரதி ராஜா நிறுத்திக் கொண்டார். நான் கூட அவரிடம் போய் "ஏன் இப்படி மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட்டீர்கள்" என கேட்டேன். அதற்கு அவர் "என் மகனே போய்விட்டான், இனி நான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.

    Advertisement

    ஆனால் அவரை தேற்ற நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர் வாழவே வேண்டாம் என நினைத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். கடுமையான மன அழுத்தத்தில் இருப்போருக்கு ஒரு ஹார்மோன் சுரக்கும். அதனால் பசிக்காது, தூக்கம் வராது.

    அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதால் அவ்வப்போது நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதற்காக எத்தனையோ முறை உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு இருக்கும் தொற்றை நீக்க சிகிச்சை தருவோம். உடல்நிலை சரியாகும், வீட்டிற்கு செல்வார். மீண்டும் இரு மாதங்களில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவார். இப்படியே வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் மாறி மாறி இருந்தார்.

    Advertisement

    ஒரு கட்டத்தில் அவர் உணவு உட்கொள்ளாததால் அவரது உடல் மெலிந்து காணப்பட்டது. மகன் போனதால் தானும் வாழ வேண்டாம் என பாரதிராஜா எடுத்த முடிவு என்னை மிகவும் பாதித்தது. கடந்த ஜனவரியில் கூட அவரது மரணம் குறித்து வதந்திகள் பரவின. பின்னர் தாய்கிழவி படம் பார்த்துவிட்டு ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என பாரதிராஜா பேசிய வீடியோவும் வைரலானது.

    அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அனைவர் மனதையும் உலுக்கியது. அதாவது உடலையும் உயிரையும் தாங்கி பிடிப்பது மனம்தான். அந்த மனம் நேர்மறையாக இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே செல்லலாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துவிட்டால் அவ்வளவுதான்.

    Advertisement

    பாரதிராஜா எப்போதும் சரியாக இருப்பார், திறமைசாலி, நேர்மையாளர்.. இவை மூன்றும் மற்றவர்களுக்கு இல்லாவிட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். நடிகர், நடிகைகள் நிறைய சொல்லி பார்த்திருப்பீர்கள். அவர் நினைத்த நடிப்பு வராவிட்டால் கோபத்தில் அடி கூட அடித்துவிடுவார்.

    நாளை என்பதில் நம்பிக்கை இல்லாதவர். அவரது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என நான் அடிக்கடி அவரிடம் சொல்லியிருக்கிறேன். அதற்கு அவர், எனக்கு அவ்வளவு நாட்கள் எல்லாம் வாழ வேண்டும் என்ற விருப்பமே இல்லை என்பார். அவருக்கு கடைசி காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது.

    நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன், "மருந்துகளை நிறுத்திவிட்டு நீங்கள் இறக்க விரும்பினால் உங்கள் மகன் உயிருடன் வந்துவிடுவாரா" என கேட்டேன், அதற்கு அவர் வரமாட்டார் என்றார். பிறகு "நீங்கள் ஏன் இறக்க விரும்புகிறீர்கள்" என்றேன். எப்போது இழப்புக்கு இன்னொரு இழப்பு ஈடுகொடுக்க முடியாது. இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.