திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி!

  • சென்னை: தமிழ்நாட்டில் தினசரி 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில், தற்போது திரைப்படம் வெளியான முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தினசரி 5 காட்சிகள் வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இப்படி இருக்கையில் விஜய் இது குறித்து உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    நலிவடைந்த திரைத்துறை

    ஒரு காலத்தில் ஆஹா ஓஹோ என்று இருந்த திரைத்துறை, ஓடிடியின் வருகைக்கு பிறகு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காலியாக தொடங்கியது. முன்பெல்லாம் திரைப்படம்தான் ஒரே பொழுதுபோக்கு. பொடிசுகள் தொடங்கி இளசுகள், பெருசுகள் வரைக்கும் இது ஒன்னுதான் போகுமிடம். ஆனால், இப்போது இன்டெர்நெட் கலாச்சாரம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது. இதில் ஓடிடியின் ஆதிக்கத்ததால், தியேட்டர்களில் கிராக்கி அப்படியே குறைந்துவிட்டது.

    இப்படி இருக்கையில், திரைத்துறையை மீட்டு எடுக்க, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். அதல் முக்கியமானதுதான் ஒரு நாளைக்கு 5 ஷோ ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்பது.

    Advertisement

    சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்திருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். தியேட்டர்களை காப்பாற்ற, மக்களை மீண்டும் அதை நோக்கி வர வைக்க வேண்டும். எனவே ஒரு நாளைக்கு 5 ஷோ என்பது அவசியமானது என திரைத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தனர். இதனையடுத்து தற்போது முதலமைச்சர் விஜய் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

    English Summary

    While permission was previously granted for only four shows daily in Tamil Nadu, Chief Minister Vijay has now ordered that permission be granted for five shows during the first seven days following a film's release.