விஜய் துணிச்சல் முடிவு! இனி புன்செய் நிலத்தை கையகப்படுத்த வேளாண் துறை தடையில்லா சான்று தேவையில்லை!

  • சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலை திட்டங்களுக்கான அனுமதி பெற ஆகும் காலவரையறையைக் குறைக்கும் நோக்கில், தமிழக அரசு ஒரு முக்கியமான கொள்கை முடிவை எடுத்துள்ளது.

    Advertisement

    இதன்படி, சாகுபடி செய்யப்படாத புன்செய் நிலங்களை தொழில்சாரா மற்றும் தொழிற்சாலை திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு, வேளாண்மையியல் துறையிடம் பெறப்பட வேண்டிய தடையில்லாச் சான்றிதழ் இனி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    புன்செய் நிலங்களை இனி தொழிற்சாலையாக மாற்றலாம்

    இதற்கான திருத்தப்பட்ட அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ஆர். கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார். இந்த அரசாணை ஜூலை 31-ஆம் தேதியிட்டு, கடந்த திங்கள்கிழமை அரசு அரசிதழில் அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாற்றப்பட்ட புதிய விதிகள் என்ன?

    'தமிழ்நாடு நில பயன்பாட்டு மாற்றம் (திட்டமிடப்படாத பகுதிகளில் வேளாண் நிலத்தை வேளாண் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுதல்) விதிகள், 2017'-இல் இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1971-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    முந்தைய நடைமுறையின்படி, ஒரு நிலத்தை தொழிற்சாலை பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டுமானால், அந்த நிலத்தில் குறைந்தபட்சம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சாகுபடி ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதனைச் சரிபார்த்துச் சான்றளிக்க மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரின் ஒப்புதலும், அவரிடமிருந்து பெறப்படும் NOC சான்றிதழும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

    தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதி 4(b)-ன் படி, நில பயன்பாட்டு மாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் நபர் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநரே நேரடியாக முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் துறையின் அறிக்கையைக் கட்டாயமாக்கிய விதி 7(2) முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தொழில் தொடங்குவது எளிதாகும்

    இதுகுறித்து கோட்டை வட்டார தகவல்கள் கூறுகையில், தொழில் தொடங்குவதை எளிதாக்கும் உயரிய நோக்கத்துடனேயே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் வருவாய் ஆவணங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நில அளவை சான்றுகளை மாவட்ட DTCP அலுவலகமே நேரடியாக ஆய்வு செய்யும்.

    தனியாக வேளாண் துறையிடம் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்பதால், தொழில் தொடங்குவதற்கான அனுமதி மிக விரைவாகக் கிடைக்கும், என்றுள்ளனர்.

    தொழில்துறையினர் வரவேற்பு

    தமிழக அரசின் இந்த முடிவிற்கு இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் கட்டுமான அமைப்புகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    Advertisement

    1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வேளாண் துறை NOC நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது CII அமைப்பால் முதலமைச்சரிடம் வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாகும். பல காலமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் முந்தய அரசுகள் இதை ஏற்கவில்லை. தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு இதனை ஏற்று நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் .

    அரசின் இந்த வெளிப்படையான மற்றும் வேகமான முடிவு இனி கட்டுமான மற்றும் தொழில் திட்டங்களுக்கான அனுமதியை எவ்வித தாமதமும் இன்றி உடனுக்குடன் பெற பெரிதும் உதவும் என்றும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    English Summary

    Big Relief for Industries in TN: Agriculture NOC Scrapped for Dry Land Conversion