நச் விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி! விஜய் ஆதரவாளர்களுக்கு நெத்தியடி பதில்! என்ன சொன்னாருனு பாருங்க

  • சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் பேசிய கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியிருந்தது. முதலமைச்சர் விஜய்யை குறி வைத்து இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

    Advertisement

    வார இறுதி எபிசோடில் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்த போட்டியாளர் ஷாதிகாவிடம், "யோசிக்காமல் எதையாவது வாக்குறுதிகளாக கொடுத்துவிட்டு, பின்னர் பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது.. எதிர்த்தரப்பு மீது பழியை போட்டுவிட்டு ஓடி ஒளிவது தலைமைத்துவம் அல்ல. அது ஏமாற்று வேலை" என்று விஜய் சேதுபதி பேசியிருந்தார்.

    Advertisement

    மேலும் அதிகாரத்தை குறிக்கும் நாற்காலி பற்றி பேசிய அவர், "எல்லா வீடுகளிலும் நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நாற்காலிகளில் அமரும்போது அது அதிகாரத்தை தருகிறது. அந்த அதிகாரம் மனிதர்களுக்கு ஒருவித போதையை தரக்கூடியது" என்றும் கூறியிருந்தார். இந்த பேச்சுகள் அனைத்தும் பிக் பாஸ் விளையாட்டின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால், விஜய் ரசிகர்கள் இதை பெர்சனலாக எடுத்துக்கொள்ள தொடங்கினர். எனவே சோஷியல் மீடியாக்களில் விஜய் vs விஜய் சேதுபதி சண்டை பெரியதாக வெடித்தது.

    எதிர்க்கட்சிகள் விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக நிற்க.. தவெகவினர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியிருந்தனர். சோஷியல் மீடியாவை தாண்டி.. பொதுவெளியிலும் இந்த சண்டை தீவிரமடைந்தது. திரைத்துறையினர் ஒரு சிலர் விஜய் சேதுபதிக்கும், பலர் விஜய்க்கும் ஆதரவாக பேசியிருந்தனர். இப்படி இருக்கையில், இந்த பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி நேரடியாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    இந்த வார பிக் பாஸ் விளையாட்டின் வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "இந்த மேடையில் நாங்கள் பேசும் கருத்துக்கள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும், எங்களுக்குமானது மட்டுமே! இது வெளியில் இருக்கும் யாரையும், எந்த அமைப்பையும் சார்ந்து குறிப்பிடுபவை அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம். இதை நான் சொல்லமலேயே புரிந்திருக்கும் என்று நினைத்தேன். கடந்த வாரமே சொல்லியிருக்கலாம் என்று நினைத்தேன்! சொல்லியிருக்க வேண்டும்.. இப்போது சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. அதனால் சொல்லியிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. ஒரு தரப்பினர் விஜய் சேதுபதி வழிக்கு வந்துவிட்டார் என்றும்.. இன்னொரு தரப்பினர், என் தலைக்கு தில்ல பார்த்தியா? என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!

    English Summary

    Vijay Sethupathi: Recent remarks made by actor Vijay Sethupathi inside the Bigg Boss house sparked a debate. Allegations arose that these comments were aimed at Chief Minister Vijay. Amidst this, Vijay Sethupathi has released a video offering a clarification.