தமிழகத்தில் மேலும் ஒரு கொடூரம்.. காஞ்சிபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! பீகார் நபர் கைது

  • காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் அருகே 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிக்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் பீகாரை சேர்ந்த துஷாந்த் என்ற 43 வயது நபரும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அங்குள்ள வீட்டு உரிமையாளரின் 10 வயது மகளிடம் துஷாந்த் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்படும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துஷாந்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Bihar Worker Arrested: A Bihar-native construction worker was arrested near Manimangalam in Kanchipuram district for allegedly harassing a 10-year-old girl. Police initiated action based on a complaint lodged by the child's parents and are continuing their investigation into the incident.