மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் ஜெயிச்சாலும் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வரும்! பாஜக நிர்வாகி பகீர்!

  • சென்னை: மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தாக்கல் செய்த தவறான பிரமாண பத்திரத்தால் அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டு அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக பாஜக நிர்வாகி செல்வக்குமார் பகீர் தகவலை அளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் தகுதியிழப்பு செய்யப்பட்ட வாய்ப்பிருக்கிறது.

    Advertisement

    அவர் தனது பிரமாண பத்திரத்தில் வருமானம் குறித்த தகவல்களை தவறாக கொடுத்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் உடனடியாக நடக்கும் ஒரு சூழல் இருக்கிறது. எனவே என்டிஏ கூட்டணியை சேர்ந்த அதிமுகவுக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்.

    மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது வருமான வரி கணக்கையும் தவறாகவே தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது கடந்த 4 ஆண்டுகளில் அவரது மொத்த வருமான ரூ 1.80 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் தற்போதைய இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவில் மொத்த வருமானம் ரூ 40.5 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். தவெகவில் சேர்ந்த 12 நாட்களில் மரகதம் குமரவேலின் கடன் ரூ 20 லட்சம் குறைந்துள்ளது. பார்த்தால் இது ஒரு லாபகரமான கட்சி தாவல் போல் தெரிகிறது" இவ்வாறு செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    தவெக சார்பில் மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, தவெக, திமுக, நாதக, மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த 5 வேட்பாளர்களுடன் சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள்.

    தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

    Advertisement

    நாளை இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தவெக 107 இடங்களில் வென்று பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    BJP Activist Selvakumar says that TVK Maragatham Kumaravel will be disqualified even she won, another by election will come due to her wrong affidavit.