தேவகவுடா பிரதமராக இருந்த போது அரசு விழாவில் கருணாநிதியுடன் மூப்பனார் இருந்தாரே? பாஜக நிர்வாகி கேள்வி

  • சென்னை: சென்னை ஐஐடி மெட்ராஸில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட அரசு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டது சாதாரணமான விஷயம் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆர்.என். ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் மாநில மையக் குழு கூட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு ஜெயபிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சென்னை ஐஐடி மெட்ராஸில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்வில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டது சாதாரணமான விஷயம்தான்.

    தேவகவுடா காலத்தில் கூட நடந்தது

    இதற்கு முன்பு இது போல் சம்பவங்கள் நடந்துள்ளன. தேவகவுடா பிரதமராகவும், கருணாநிதி முதல்வராகவும் இருந்த போது ஒரு நிகழ்வில் மேடையில் மூப்பனார் அமர்ந்திருந்தார். எனவே நயினார் நாகேந்திரன் மெட்ரோ விழாவில் கலந்து கொண்டதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இரு நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே பாஜக வந்த பிறகுதான் இந்த பிரச்சனை என்பதெல்லாம் கிடையாது.

    Advertisement

    தவெக அரசுக்கு நிர்வாக திறன் இல்லை

    தவெகவின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது. இதுவரை தமிழகத்தில் எங்குமே சாலை அமைக்கவில்லை. மின்வெட்டால் எவ்வளவு பேர் துயரப்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தவெக அரசுக்கு நிர்வாக திறன் கிடையாது. எனவே தடையற்ற மின்சாரம், குடிநீர், சாலை வசதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் முக்கியமான விஷயம். இவற்றில் தவெக அரசு கவனம் செலுத்தி அதில் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டும்.

    4500 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை

    ஒரு நாளைக்கு 4500 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை என்கிறார்கள். இந்த அளவுக்கு மின்சாரத்தை பெற 45 ஆயிரம் கோடி முதலீடு செய்தால் மட்டுமே முடியும். முதல்வரும், அமைச்சர்களும் நிர்வாக திறமையற்றவர்கள் என்பதை விரைவில் அவர்களாகவே வெளிப்பட்டுக் கொள்வார்கள்.

    Advertisement
    “நயினார் எப்படி மோடியின் மேடையில் அமரவைக்கப்பட்டார்? என்ன புரோட்டோகால்?” - மாணிக்கம் தாகூர் கேள்வி

    12 ஆண்டுகளில் காங்கிரஸ் நிலைமை

    கடந்த 12 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எப்படி தேய்ந்து கொண்டே செல்கிறது என்பதை ராகுல் உணர வேண்டும். தேர்தலில் ஜெயிக்காதவர்கள் எல்லாம் பெரிய தலைவர்கள் இல்லை. அது போல்தான் ராகுலும்! இவ்வாறு ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

    ஐஐடி மெட்ராஸ்

    சென்னை ஐஐடி மெட்ராஸில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விழா மேடையில் அமர்ந்திருந்தார்.

    Advertisement
    பாஜகவை பார்த்து பயம்.. திமுக தோற்க 'இது’ தான் காரணம்! ஸ்டாலின் சொன்னது தெரியுமா? விளாசிய மாணிக்கம்!

    மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது மத்திய அரசு நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் நயினார் நாகேந்திரன் எந்த புரோட்டோகால் மூலம் அமரவைக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

    எந்த புரோட்டோகால்?

    அது போல் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாரும், மத்திய அரசு நடத்திய நிகழ்ச்சியில் எம்எல்ஏ அல்லது எம்பி போன்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதித்துவ பொறுப்பிலும் இல்லாத கட்சி சார்ந்த நபர் எந்த புரோட்டோகால் அடிப்படையில் மேடையில் அமர வைக்கப்பட்டார் என தெரியவில்லை. இது தவறான முன்னுதாரணம். அரசு விழாவில் எம்எல்ஏ அல்லது எம்பி இல்லாத ஒருவரை அமர வைத்தது மிகப் பெரிய தவறு என விமர்சித்திருந்தார்.

    English Summary

    BJP Activist R.N.Jayaprakash says that Nainar Nagendran present in government function was normal thing, don't politicise.