'யோவ் மிலிட்டரி , உன் சர்வீஷ்ல இன்னைக்குத்தான்யா நீ ஒழுங்கா பேசி இருக்க' கமலை கொண்டாடும் பாஜகவினர்

  • சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், எலான் மஸ்கிற்கு கொடுத்த பதிலடியை பார்த்து பாஜகவினர் வாயடைத்து போயிருக்கிறார்கள். "யோவ் மிலிட்டரி ... உன் இத்தனை வருஷ சர்வீஷ்ல இன்னைக்குத்தான்யா நீ ஒழுங்கா பேசி இருக்க... அதுவும் இந்த லைன்.. "இந்தியா ஒரு ஜனநாயக நாடு; அது ஒரு காலனி அல்ல. நாங்கள் உலகை வரவேற்கிறோம்; ஆனால், இந்தியர்களாகிய நாங்களே எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்போம் என்கிற லைன் நெருப்பு மாதிரி இருக்கிறது" என்று பாஜகவினர் பாராட்டி உள்ளனர்.

    Advertisement

    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டிருந்த பதிவில் கூறுகையில், "திரு. எலன் மஸ்க் அவர்களே, ஆம்... இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பில்லியனரும் ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது.

    Advertisement

    கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகவும் நடைமுறைக்குச் சாத்தியமான, மலிவான 'லாஸ்ட்-மைல்' (last-mile) தீர்வை யார் வழங்குகிறார்களோ, அந்த இந்திய மற்றும் சர்வதேசச் செயற்கைக்கோள் இணையச் சேவை நிறுவனங்க இடையேயான போட்டியை இந்தியா வரவேற்க வேண்டும். வருமானம் குறைவாக உள்ள நாடுகளில், செயற்கைக்கோள் இணையமும் எளிய மக்களுக்குக் எட்டக்கூடிய விலையில் கிடைக்க வேண்டும். அதிக சந்தாக் கட்டணமும், உபகரணங்களின் அதிக விலையும் அதைச் சாதாரணக் குடும்பங்களின் கைக்கு எட்டாத ஒன்றாக மாற்றிவிடக் கூடாது. இணைய இணைப்பு என்பது டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க வேண்டுமே தவிர, புதியதொரு இடைவெளியை உருவாக்கிவிடக் கூடாது.

    Advertisement
    Kamal Haasan: ஸ்டார்லிங் பஞ்சாயத்து.. இந்தியா மீது ஆதங்கத்தை கொட்டிய எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி

    நமது அலைக்கற்றையும் தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களும் வெறும் வணிகச் சொத்துக்கள் அல்ல, அவை நாட்டின் உத்திசார் உள்கட்டமைப்புகள் என்பதை இந்தியா நன்கறியும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு அம்சங்களில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள முடியாது.

    ஒவ்வொரு நாடும் தன் சொந்த நலன்களின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்கள் சொந்த நாட்டில் சுயநலப் பாதுகாப்புக் கொள்கைகளைப் பின்பற்றிவிட்டு, மற்றவர்களுக்குச் 'சுதந்திரச் சந்தை' பற்றி உபதேசம் செய்ய முடியாது. தனது உள்நாட்டுத் தொழிற்துறையைப் பாதுகாக்க சீன மின்சார வாகனங்கள் மீது அமெரிக்கா 100% வரியைச் சுமத்தியது போலவே, இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஹூவாய் நிறுவனத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தங்கள் சொந்த நலன்களுக்குத் தேவைப்படும்போது மட்டும் மற்றவர்களிடம் 'சமமான வாய்ப்புகளை' எதிர்பார்க்கக் கூடாது.

    Advertisement

    ஜனநாயக நாடான இந்தியாவின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்தியர்களாகிய நாங்களே உள்நாட்டிற்குள் விவாதிப்போம், கேள்விகள் கேட்போம், அதைச் சரிசெய்வோம்.

    இந்தியாவின் கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதியைக் கொண்டு சேர்க்கும் 'பாரத்நெட்' (BharatNet) திட்டத்தையே எடுத்துக்கொள்வோம். தலைமை தணிக்கையாளர் தனது 2026 தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி, ₹39,888 கோடி செலவிடப்பட்ட பிறகும், சேவைக்குத் தயாராக இருந்த கிராம பஞ்சாயத்துகளில் 33.2% மட்டுமே செயல்படும் நிலையில் இருந்தது ஏன்? அத்திட்டம் தனது முதன்மை இலக்குகளை எட்டுவதற்கு ஏன் திணறுகிறது? என்று நாங்களே கேள்வி கேட்போம். அதே நேரத்தில், உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் இணையத் தரவை ) வழங்கி, லட்சக்கணக்கான மக்களை இணையவழி இணைப்பிற்குள் கொண்டுவந்துள்ள நமது தொலைத்தொடர்புத் துறையையும் அதன் விதிமுறைகளையும் பாராட்டவும் எங்களுக்குத் தெரியும்.

    Advertisement

    இந்தியா ஒரு ஜனநாயகம், யாரோ ஒருவரின் காலனி ஆதிக்க நாடு அல்ல! நாங்கள் உலகை வரவேற்கிறோம், ஆனால் இந்திய மக்களாகிய நாங்கள் எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம் - மேற்கத்திய சுயநல அமைப்புகளோ, அவர்களின் இரட்டை நிலைகளோ அல்லது இந்தியாவைச் சேர்ந்தவரோ அமெரிக்காவைச் சேர்ந்தவரோ எந்தவொரு பில்லியனரோ அதைத் தீர்மானிக்க முடியாது"இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருந்தார்.

    அம்பானி தான் இந்தியாவின் பாஸா? மஸ்க் சீறியது ஏன்?,இந்தியா மீது முழு பனிப்போரை தொடங்கிய அமெரிக்கா?

    கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை பார்த்த பாஜகவினர் பலரும், கமல்ஹாசன் தான் இந்த பதிவினை போட்டாரா. நம்பவே முடியவில்லை.. என்று ஆச்சரியமாக பாராட்டி வருகிறார்கள். ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், யோவ் மிலிட்டரி ... உன் இத்தனை வருஷ சர்வீஷ்ல இன்னைக்குத்தான்யா நீ ஒழுங்கா பேசி இருக்க...

    Advertisement

    அதுவும் இந்த லைன்.. "இந்தியா ஒரு ஜனநாயக நாடு; அது ஒரு காலனி அல்ல. நாங்கள் உலகை வரவேற்கிறோம்; ஆனால், இந்தியர்களாகிய நாங்களே எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்போம். மேற்கத்திய நாடுகளின் சுயநல நோக்கங்களோ, அவர்களின் இரட்டை வேடங்களோ அல்லது இந்தியரோ அல்லது அமெரிக்கரோ ஆன எந்தவொரு கோடீஸ்வரரோ அதைத் தீர்மானிக்க மாட்டார்கள்" என்கிற லைன் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று நெட்டிசன் கூறியுள்ளார்.

    இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "உங்கள் நடிப்புத் திறனை நான் எப்போதும் பெரிதும் மதித்திருக்கிறேன்... ஆனால், நாடு உங்களைச் சார்ந்திருக்கும் இத்தருணத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் அந்த அதிரடியான கருத்துகளும் துணிச்சலான செயல்பாடுகளும் மிகுந்த பாராட்டுக்குரியவை... வருக வருக கமல் சார்... யாரை எதிர்த்து மோதியிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்துவோம்..." என்று கூறியுள்ளார்.

    மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் வகையில் கமல்ஹாசன் வெளியிட்டிருந்த இந்தப் பதிவு ஆச்சரியமளிப்பதாக இருந்தது. ஆனால், உங்கள் தலைவரான ராகுல் காந்தியோ எலான் மஸ்க்குடன் கைகோர்த்து, இந்தியாவையும் அம்பானிகளையும் இழிவுபடுத்தும் வகையில் அவரை இந்தியாவுக்கு வரவேற்கிறார். உள்நாட்டு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; இருப்பினும், இந்தியாவின் நலன் சார்ந்து நீங்கள் எடுத்த அந்த நிலைப்பாட்டை உங்கள் கூட்டணி தலைவர் ராகுல் காந்திக்கும் நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    நான்காவது நெட்டிசன் கூறுகையில், "எலனின் அதிருப்திக்குக் காரணம் அனுமதி பெறுவது தொடர்பான நடைமுறை மட்டுமல்ல; மாறாக, அதற்காக ஏற்கனவே செலவிடப்பட்ட நேரமும் பணமும்தான் என்று நான் கருதுகிறேன். எந்தவொரு வெற்றிகரமான வணிகத்திற்கும் நேரமும் பணமும் மிக முக்கியமான வளங்களாகும்; இவற்றை வீணடிப்பதைச் சிலர் ஒரு தீவிரமான தவறாகவே கருதுகின்றனர்.

    அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் விருப்பம் இல்லையென்றாலோ அல்லது நாட்டின் இறையாண்மைக்கு உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் கருதினாலோ, அதைத் தொடக்கத்திலேயே வெளிப்படையாகத் தெரிவித்து அந்த விவகாரத்திற்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக, இந்த விவகாரம் சுமார் ஐந்து ஆண்டுகள் - அதாவது ஏறக்குறைய 1,825 நாட்கள் - இழுத்தடிக்கப்பட்டது." என்று விமர்சித்துள்ளார்.

    English Summary

    BJP members are celebrating the retort given by actor and Makkal Needhi Maiam party leader Kamal Haasan to Elon Musk.