வானதி சீனிவாசன் பதவி திடீர் பறிப்பு.. பாஜக மகளிரணி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்! அதிரடி அறிவிப்பு

  • சென்னை: பாஜகவின் மகளிரணி பிரிவான மகிளா மோர்ச்சா தலைவராக இருந்த வானதி சீனிவாசன், அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். வானதி சீனிவாசனோடு சேர்த்து தேசியளவில் பல்வேறு பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    Advertisement

    பாஜகவின் தேசிய தலைவரான நிதின் நபின் இன்று தேசியளவில் பல்வேறு நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் கடந்த பல ஆண்டுகளாக முக்கிய பதவியில் இருந்த பலரது பதவி நீக்கப்பட்டுள்ளது. பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    Advertisement

    பாஜக நிர்வாகிகள்

    மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாஜகவின் பொருளாளர் பதவி தரப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் உள்ளிட்டோர் தேசிய பொது செயலாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    மேலும், பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த அமித் மாளவியா, தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரை சேர்ந்த தீபக் மாஸ்கே சமூக வலைத்தள பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பாஜகவின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா, பாஜவின் இளைஞரணியான யுவ மோர்ச்சா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    வானதி சீனிவாசன்

    அதேபோல பாஜகவின் மகளிரணி பிரிவான மகிளா மோர்ச்சா தலைவராக இருந்த வானதி சீனிவாசன், அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வானதி சீனிவாசன் கடந்த 2020ம் ஆண்டு முதலே மகிளா மோர்ச்சா தலைவராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    யார் இவர்?

    56 வயதான வானதி சீனிவாசன் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2014 முதல் 2020 வரை தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். பிறகு 2020 ஜூலை முதல் அக்டோபர் வரை பாஜக மாநில துணை தலைவராகவும் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்தே 2020 அக்டோபர் மாதம் அவர் பாஜக மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

    Advertisement

    தேர்தலை அரசியலை பொறுத்தவரை 2011ல் மயிலாப்பூர் மற்றும் 2016ல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் அந்த தேர்தல்களில் தோல்வி அடைந்திருந்தார். 2021ல் கோவை தெற்கு தொகுதியில் நட்சத்திர வேட்பாளரான கமல் ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    பெண்களுக்கு முக்கியத்துவம்

    நிதின் நபின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பெண்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜ்யசபா எம்.பி. பாங்னோன் கோன்யாக், சங்கீதா யாதவ், கவிதா படிதார் ஆகியோர் தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்பு பாஜகவின் முந்தைய தேசிய பொறுப்புகளில் 5 பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 64 தேசிய நிர்வாகிகளில் 12 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல ஓபிசி பிரிவின் தலைவராக கே. லட்சுமனுக்கு பதிலாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்பால் மௌர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை பிரிவுக்கு ஜமால் சித்திக்கிக்கு பதிலாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த குன்வர் பாசித் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    BJP president Nitin Nabin announces a major reshuffle of the party’s national office-bearers(பாஜக மகளிரணி பிரிவில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்): Vanathi Srinivasan removed as Mahila Morcha chief.