விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் சமீபத்திய டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்த விஜய், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்காமல் சென்னை திரும்பினார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன், தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.. இதுதான் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    "காங்கிரஸ் தவெக மந்திரி சபையில இருப்பதால், கூடியமட்டும் அந்த விஷயத்தை கொஞ்சம் லோ புரொபைலில் விஜய் டீல் செய்கிறார்.. மெஜாரிட்டி இல்லை என்பதால் கட்டாயம் காரணமாகவே, காங்கிரஸை சேர்த்து கொண்டுள்ளோம் என்பதிலும், அதற்காக மத்தியில இருக்கிற பாஜக அரசை பகைத்துக் கொள்ள கூடாது என்பதிலும் மாநில அரசு கவனமாக உள்ளது.

    Advertisement

    அமித்ஷா தரப்பு சொல்வதென்ன

    ஏனென்றால் காங்கிரஸை சேர்த்ததால், பாஜகவுக்கு கோபம் உள்ளது.. நிதி போன்ற விஷயங்களுக்கு அவர்களின் தயவு தேவையாக உள்ளது.. அதனால காங்கிரஸோட இருக்கிற நெருக்கத்தை ரொம்ப பிரதானமாக முன்னாடி கொண்டு வராமல், பின்னுக்குத் தள்ளி டீல் செய்கிறார் விஜய். கேரளா பதவியேற்பு விழாவுக்கும் போகவில்லையே.

    நேற்று மாலை விஜய் தரப்பிலிருந்து, 'நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அப்பாயிண்ட்மென்ட் கேட்டுள்ளோம், அது கிடைக்கவில்லை என்றால் உங்களைச் சந்திக்க வருகிறோம்' என்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை காத்திருந்தும் அமித்ஷாவின் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காததால், உடனடியாக போன் செய்து, 'நாங்கள் நாளை வந்து உங்களைச் சந்திக்கிறோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அப்பாயிண்ட்மென்ட் கேட்காத தவெக

    உடனே காங்கிரஸ் தரப்பில், "எங்களை சந்திப்பதற்கு முக்கியத்துவம் தராமல், அமித்ஷாவின் அப்பாயிண்ட்மென்ட்டுக்காக காத்திருக்கிறீர்கள்.. அவர் உங்களுக்கு நேரம் கொடுப்பாரா இல்லையா என்று தெரியவில்லை..

    ஒருவேளை அவர் அப்பாயிண்ட்மென்ட் மறுத்தால், அதற்கு பிறகு எங்களை வந்து பார்ப்பதாக சொல்வது, எங்களை அவமதிப்பது போல் உள்ளது.. நாளை எங்களுக்கு வேறு பணிகள் உள்ளன.. சோனியா காந்திக்கும் உடல்நிலை சரியில்லை, ராகுல் காந்தியும் அவசரமாக வெளியே செல்கிறார்" என்று சொல்லி விஜயைச் சந்திப்பதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தரப்பில் நிராகரித்துவிட்டனர்.

    மற்றொருபுறம், சோனியா காந்தி, ராகுல் காந்தியின் அப்பாயிண்ட்மென்ட்டையே தவெக தரப்பில் கேட்கவில்லை என்கிறார்கள்.. இதில் எது உண்மை, எது பொய் என்று தெரியவில்லை.. டெல்லி அரசியல் வட்டாரங்களோ விஜய் அமித்ஷாவின் அப்பாயிண்ட்மென்ட் கேட்டார் என்பதில் உறுதியாக இருக்கின்றன.

    Advertisement

    பிரவீன் சக்கரவர்த்தி

    மாலை 7:30 மணிக்கு நிதியமைச்சரை சந்தித்த பிறகு கிடைத்த இடைவெளியில், அமித்ஷாவைப் பார்த்துவிடலாம் என்பதுதான் தவெக-வின் திட்டமாக இருந்துள்ளது. ஆனால் அமித்ஷா தரப்பிலோ, விஜய் காங்கிரஸோடு கூட்டணி அமைத்ததால் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

    ஆரம்பத்தில் பாஜக இவர்களைக் கூட்டணிக்கு அழைத்தபோது கொள்கை எதிரி என்று சொல்லிய விஜய், அந்த கூட்டணியையும் மறுத்துவிட்டார். இந்த அதிருப்தி காரணமாகவும் அமித்ஷா விஜயைச் சந்திப்பதைத் தவிர்த்து, அப்பாயிண்ட்மென்ட் தராமல் இழுத்தடித்துள்ளார். அதனால் இரவு 10 மணி வரை காத்திருந்தும் அமித்ஷாவின் அப்பாயிண்ட்மென்ட்டும் கிடைக்காமல், ராகுல் காந்தியையும் சந்திக்க முடியாமல் விஜய் தரப்பு திணறியுள்ளது. மொத்தத்தில் இந்த டெல்லி பயணம் முற்றிலும் சொதப்பலாக முடிந்துள்ளது.

    Advertisement

    பின்வரிசையில் காங்கிரஸ்?

    செய்தியாளர்களை சந்தித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் விஜய் அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். இப்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தைச் சுற்றிலும் பிரவீன் சக்கரவர்த்தியின் பேனர்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. அவர் அடுத்ததாக ராஜ்யசபா எம்பி ஆகப் போவதாகப் பேசப்படுகிறது.

    ஆனால், ஒரு காங்கிரஸ்காரருக்கு விஜய் எம்பி பதவி கொடுப்பாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், காங்கிரஸோடு தவெக நெருக்கம் காட்டுவது அமித்ஷாவிற்கு பிடிக்கவில்லை என்பது விஜய் தரப்பிற்கு தெளிவாகவே பட்டவர்த்தனமாக உணர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, காங்கிரஸைக் கூட்டணியில் வைத்திருந்தாலும் அவர்களை பிரதானப்படுத்தாமல், பின்வரிசையிலேயே வைக்க வேண்டும் என்பதில் மாநில அரசு கவனமாக இருப்பதாக தெரிகிறது.

    Advertisement

    காங்கிரஸ் இல்லாத பாரதம்

    பாஜகவை பொறுத்தவரை மாநிலக் கட்சியான திமுக ஒரு பெரிய தடையல்ல; அவர்களின் முதன்மை நோக்கமே "காங்கிரஸ் இல்லாத பாரதம்" என்பதுதான். தென்னிந்தியாவில் கேரளா, தெலுங்கானா, கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பங்கெடுப்பது பாஜகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் திமுகவை வீழ்த்த நினைப்பது பாஜகவிற்கு அரசியல் ரீதியாக மகிழ்ச்சியைத் தந்தாலும், அவர் காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த அதிருப்தியை மத்திய அரசு ஏதோ ஒரு வழியில் தவெக அரசுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Is TVK Pushing Congress to the Sidelines? Vijay’s Failed One-Day Delhi Visit Sparks BJP’s Sharp Warning