பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்!

  • சென்னை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசனும் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை, தலையில் கட்டுடன் முகத்தில் சிரிப்புடன் வெளியான புகைப்படத்தால் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    அண்ணாமலையின் ராஜினாமாவை தொடர்ந்து தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், அண்ணாமலையின் அரசியல் முடிவுக்குப் பிறகு பாஜகவில் அதிர்வுகள் தொடர்ந்து காணப்படுகின்றன என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் தற்போது மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசனும் தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார்.

    சுமதி வெங்கடேசன்

    இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகுந்த மனவேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுமதி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதோடு மட்டுமல்லாமல், கட்சியுடனான தனது பயணத்தையும் முடித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக

    பாஜகவில் பணியாற்றியது தனது அரசியல் வாழ்க்கையில் பெருமைக்குரிய அனுபவமாக இருந்ததாகவும், அந்த வாய்ப்பை வழங்கிய கட்சித் தலைமைகளுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும், தேசப்பற்று, தேசிய உணர்வு மற்றும் நாட்டுக்கான சேவை என்ற கொள்கைகளும் தன்னை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை என்றும், நீண்டகால சிந்தனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் சுமதி வெங்கடேசன் கூறியுள்ளார்.

    Advertisement

    அண்ணாமலை

    தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்திருக்கிறார். எனினும், பாஜகவை விட்டு விலகிய பிறகு தனது அடுத்தகட்ட அரசியல் திட்டம் என்ன என்பது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையப் போகிறாரா அல்லது வேறு கட்சியைத் தேர்வு செய்யப் போகிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    தமிழக பாஜக

    இதற்கிடையில், தனது புதிய அரசியல் இயக்கத்தை அறிமுகப்படுத்திய அண்ணாமலை, சாமானிய மக்களுக்கான அரசியலை உருவாக்க வேண்டும். தனிநபர் புகழை மையமாகக் கொண்ட அரசியலிலிருந்து விலகி, பொதுமக்கள் பங்கேற்கும் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், தற்போதைய இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான பயிற்சி மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

    Advertisement

    நயினார் நாகேந்திரன்

    அண்ணாமலையின் இந்த முடிவை பாஜக தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு ஒருவரின் விலகலால் பாதிப்பு ஏற்படாது என்றும், கட்சி தனது கொள்கைப் பாதையில் உறுதியாக பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜக நிர்வாகிகள்

    ஆனால், அண்ணாமலைக்கு நெருக்கமான நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறுவது தமிழக பாஜகவில் புதிய சிக்கல்களை உருவாக்குமா என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கம் எந்த அளவுக்கு ஆதரவை திரட்டுகிறது, அதில் எத்தனை முன்னாள் பாஜக நிர்வாகிகள் இணைகிறார்கள் என்பதுதான் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    BJP leader Sumathi Venkatesan resigns after Annamalai's exit, triggering fresh discussions on political shifts in Tamil Nadu.