நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர

  • சென்னை: தமிழக பாஜகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து பேச்சுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் இருந்து விலகிச் சென்ற நிர்வாகிகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் இணைக்கும் பணியில் கவனம் செலுத்துமாறு மாநில நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பதவியை பறிக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதால் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்கின்றனர்.

    Advertisement

    சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக மாநில மையக்குழுக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால வளர்ச்சி, தேர்தல் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    Advertisement

    குறிப்பாக, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து தேசிய தலைமையிடம் இருந்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய நயினார் நாகேந்திரன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    தமிழக பாஜக

    அந்த ஆலோசனையில், கடந்த சில ஆண்டுகளில் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் தொடர்புகொண்டு கட்சியில் இணைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மாநிலத்தின் 67 மாவட்ட அமைப்புகளுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமிக்கும் திட்டம் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. மாவட்ட அளவிலான அமைப்பு பணிகளை கண்காணிக்க கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    பாஜக மறுசீரமைப்பு

    கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டங்களுக்கு செல்லும் பொறுப்பாளர்கள் நேரடியாக நிர்வாகிகளுடன் தங்கி, அவர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் உள்ளக நிலவரங்கள் மற்றும் அமைப்பு பலவீனங்களை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என கருதப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லி மேலிடம்

    இந்நிலையில், தமிழக பாஜக தலைமை அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்வியும் கட்சிக்குள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து தேசிய தலைமையிடம் பல்வேறு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், எதிர்காலத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என்ற ஊகங்களும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.
    மேலும், தேர்தல் காலத்தில் கட்சி சார்பில் வழங்கப்பட்ட 'நிதி' தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    நரேந்திர மோடி

    இது தொடர்பாக சில முக்கிய நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து கட்சி தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதத்தில் தமிழகம் வரக் கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த பயணத்துக்கு முன்பாக தமிழக பாஜகவில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    நயினார் நாகேந்திரன்

    இதனால், தமிழக பாஜகவில் அடுத்த சில வாரங்கள் அரசியல் ரீதியாக முக்கியமான காலகட்டமாக அமையக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் முனைப்பில் நயினார் நாகேந்திரன் இறங்கி இருக்கிறார். ஒருவேளை தனது பதவியை பறிக்க டெல்லி தலைமை திட்டமிட்டாலும் ஆதரவாளர்கள் மூலம் அவ்வப்போது ஏதாவது செய்து சமாளித்து விடலாம் என நினைக்கிறாராம்.

    Advertisement

    டெல்லி தலைமை

    இப்போதைக்கு அவரது முன்னிற்கும் பெரிய பிரச்சனை டெல்லி தலைமை தேர்தல் செலவு களுக்காக ஒதுக்கிய நிதி மட்டும்தான். ஆனால் அதையும் ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம் தற்போதைக்கு தனது பதவியை மட்டும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம் நயினார்.

    English Summary

    Internal restructuring discussions and organisational reviews spark fresh speculation over BJP Tamil Nadu leadership dynamics.