நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்!

  • சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கடும் தோல்வியடைந்திருந்தது. இதனையடுத்து கட்சியின் கட்டமைப்பில் சில அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டும் என்று தேசிய தலைமை களமிறங்கியிருப்பதாகவும், இதன் தொடர்ச்சியாக மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் கேரள ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், அண்ணாமலை கட்சியை விட்டு பிரிந்தது சரியதான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டிருக்கின்றன.

    Advertisement

    தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த அனைவருக்கும் பெரிய பதவிகளை கட்சி தலைமை தூக்கி கொடுத்திருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்திருந்தார். அதேபோல எல்.முருகன் மத்திய இணையமைச்சராக இருக்கிறார். இப்படி கட்சியின் மாநில தலைவராக இருந்தவர்களுக்கு, தலைமை உரிய அங்கீகாரம் கொடுத்திருந்தது. இந்த லிஸ்ட்டில் மிஸ்ஸான ஒரே ஆள் அண்ணாமலை மட்டும்தான்.

    Advertisement

    கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை இருந்த காலத்தில், பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருந்து. இரட்டை இலக்கத்தை கட்சி அடைந்திருந்தது. இருந்தும் எந்த பலனும் இல்லை. இதற்காக அண்ணாமலைக்கு, கடந்த சடமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை.

    சரி எம்எல்ஏ சீட் தான் கொடுக்கல.. நிச்சயம் ஆளுநர் போஸ்ட்டிங் கிடைத்துவிடும் என்று அண்ணாமலை பொறுமை காத்தார். கடைசியில் அதுவும் நடக்காததால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோரை சந்தித்து, தனது ராஜினாமாவை அறிவித்து ஷாக் கொடுத்தார்.

    Advertisement

    எனக்கு முன்னாடி தலைவரா இருந்தவங்களுக்கு மத்திய அமைச்சர், ஆளுநர் போஸ்டிங் எல்லாம் தறீங்க.. நான் மட்டும் என்ன ஏமாளியா? என்கிற ரீதியில் அண்ணாமலை கொந்தளித்துதான் இந்த முடிவை எடுத்திருந்தார்.

    இந்த முடிவு அறிவிக்கப்பட்டு முழுசா ஒரு வாரம் கூட ஆகவில்லை.. அதற்குள் பாஜக தேசிய தலைமை, மாநில தலைவரை மாற்றும் பணியில் களமிறங்கியிருக்கிறது. புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் ஒரு பக்கம் சூடு பிடித்திருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தற்போதைய தலைவர் நயினாருக்கு ஆளுநர் பொறுப்பை கொடுக்கவும் தேசிய தலைமை முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் ஆளுநராக அர்லேக்கர்தான் இருக்கிறார். எனவே அவரை தமிழகத்திற்கான முழுநேர ஆளுநராக மாற்றிவிட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரனை ஆளுநராக நியமிக்க கட்சி தலைமை ரெடியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது அண்ணாமலை தரப்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. ஏற்கெனவே அண்ணாமலை ராஜினாமா செய்த பின்னர், அவரது ஆதரவாளர்கள் பாஜகவை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது நயினாருக்கு ஆளுநர் பதவி என்கிற தகவல்கள் வெளியானதால், மீதமிருக்கும் அண்ணாமலை ஆதரவாளர்களும் மொத்தமாக பாஜகவை விட்டு ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக பாஜகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    English Summary

    Nainar Nagendran: The BJP suffered a severe defeat in the Tamil Nadu Assembly elections. Following this, reports indicate that the national leadership has stepped in to implement sweeping changes to the party's organizational structure, with speculation that State President Nainar Nagendran could be appointed as the Governor of Kerala. Meanwhile, there is also talk suggesting that Annamalai’s decision to leave the party was the right move.