சென்னை:அமைச்சர் புஸ்சி ஆனந்த் நீர்வளத்துறை பிரச்சனைகளை பார்க்காமல், முன்னாள் ஆமைச்சர்களிடம் பேரம் பேசுவதில் பிஸியாக இருக்கிறார். விஜயின் நண்பர்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வது அரசியல் அமைப்பு சட்டங்கள் எதிரானது என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது.
கரூர் சம்பவம் நடந்த அன்றே விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்குவது என்பது அரசியல் ரீதியானது தான். இந்தியா கூட்டணி என்பது தற்போது இல்லை . பிரதமர் நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக வருவார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீனவர் பிரச்சனை தொடங்கி பல்வேறு பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்த கட்சியாக தான் இன்றும் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவின் முதல்வரை நேரில் சந்தித்த கடிதம் எழுதினாலோ, அணை கட்டுவதை முதலமைச்சர் சிவக்குமார் தடுத்து நிறுத்தி இருப்பார். ஆனால் காங்கிரஸ் தமிழக தலைவர் அதனை எதுவும் செய்யாமல் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். தமிழக முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் ஒருவருக்கு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்படும் நிலை உள்ளது. திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எந்த கட்சிகளும் இந்தி கூட்டணியில் இல்லை. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். திமுகவுடன் நட்பில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்வது அங்கே ஒரு கால் இங்கு ஒரு கால் வைத்தது போல் உள்ளது. பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்பதை போல் திருமாவளவன் கருத்துள்ளது. அமைச்சர் கீர்த்தனா பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது குழந்தைகளை அடிமைகளை நடத்துவது போல் நடத்தி ஆய்வை மேற்கொண்டுள்ளார். மூன்று நான்கு கேமராவுடன் சென்று குழந்தைகளிடம் பேசினால் பயப்படத் தான் செய்யும். அமைச்சர் இடம் பேசும்போது குழந்தைகள் பயந்த நிலை மாறி உள்ளது. பள்ளி உள்ளிட்ட இடங்களில் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. அது நல்ல செயல்தான். தமிழக வெற்றி கழகத்தின் 59 நாள் ஆட்சியில் 109 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு நாளைக்கு மூன்று கற்பழிப்பு இரண்டு நாளைக்கு மூன்று படுகொலை நடந்து வருகிறது. தமிழக வெற்றி கழக ஆட்சியை நான் குறை சொல்லவில்லை. ஆனால் ஏன் அதனை எல்லாம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் கேள்வி. அமைச்சர் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் யாரிடமும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்து தான் ஆட்சி பொறுப்பை ஏற்கின்றனர். ஆனால் விஜயின் நண்பர்கள் ஆன ஆரோக்கியசாமி போன்றோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வது அரசியல் அமைப்பு விதிகளுக்கு எதிரானது. தற்போது நடப்பதை போன்ற மோசமான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை அமைச்சர் புஸ்ஷி ஆனந்த் குதிரை பேரத்தில் பிஸியாக உள்ளார். நீர்வலைத் துறையை அவர் கவனிக்கவில்லை. குதிரை பேரத்தில் பிஸியாக இருந்து வருகிறார்" என்றார்.நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ்
திருமாவளவன்
தவெக
குதிரை பேரம்