சென்னை: தகவல் தொழில்நுட்ப உலகம் இந்த அக்டோபர் மாதத்தை 'பிளாக் அக்டோபர்' (கருப்பு அக்டோபர்) என்று அழைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளவில் உள்ள இணையதளங்கள், அரசு பக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிவேக சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இதற்கு முக்கியக் காரணம்.
முன்பெல்லாம் ஒரு இணையதளத்தையோ அல்லது கம்ப்யூட்டர் அமைப்பையோ முடக்க மனித ஹேக்கர்களுக்கு பல நாட்களும் அதிக உழைப்பும் தேவைப்பட்டது. ஆனால், இப்போது மனிதர்கள் செய்யும் வேலையை விட மிக விரைவாக, தானாகவே பிழைகளைக் கண்டறிந்து தாக்கும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர்.
உலகில் உள்ள சுமார் 70 சதவீத இணையதளங்கள் 'பிஎச்பி' (PHP) என்ற மென்பொருள் மொழியைக் கொண்டு இயங்குகின்றன. இதில் உள்ள பலவீனங்களை ஏஐ துணைகொண்டு ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய நிலையில், அதை வைத்து ஹேக்கர்களும் உடனே களத்தில் இறங்கினர். இந்த குறைபாட்டிற்கு 'பிஎச்பி2ஷெல்' (PHP2Shell) என்று பெயர். இணையதளங்களில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் நேரடியாக தகவல்களைத் திருட முடியும் என்பதால் உலகளவில் பதற்றம் உருவானது. பாதுகாப்பு அமைப்பான கிளவுட்பிளேர் (Cloudflare) வெளியிட்ட தகவலின்படி, தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான ஹேக்கிங் முயற்சிகள் உலகம் முழுவதும் பதிவாகின. தாக்குதலின் தீவிரம் அதிகரித்ததால், நெதர்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பல அரசு இணையதளங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டு சரிசெய்யப்பட்டன. அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை (NSA) அமைப்புகள், தளங்களில் உள்ள ஓட்டைகளை உடனே சரிசெய்ய முடியாவிட்டால், பாதுகாப்பு கருதி இணையதளங்களை தற்காலிகமாக ஆஃப்லைனில் வைக்குமாறு பல நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தன. மறுபுறம், தென் கொரிய வங்கிகளை குறிவைத்து 'ஆர்டெக்ஸ்' (Artex) என்ற ஏஐ கருவி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 68,000 வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவிலும் கூட, தானியங்கி ஏஐ ஏஜென்ட்டுகள் நாட்டின் தொழில்நுட்ப கட்டமைப்பைக் குறிவைத்து தாக்கும் ஆபத்து குறித்து கணினி அவசர கால உதவிக் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக் எஸ்பிஐ வங்கியில் கூட ஹேக்கிங் முயற்சி நடந்தது. பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, தனிநபர்களின் கணக்குகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் தகவல் தளத்தில் உள்ள ஓட்டையை ஏஐ மூலம் ஹேக்கர்கள் கண்டறிந்துவிட்டால், அங்குள்ள பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடன் அட்டை விவரங்கள் மற்றும் வங்கி தகவல்களை நொடிப் பொழுதில் திருடிவிட முடிகிறது. தொழில்முனைவோர் கோலின் பார்சன்ஸ் என்பவரது ஏஐ குறியீட்டு தளத்தின் கணக்கு திருடப்பட்டு, அவர் அறியாமலேயே சுமார் 449 டாலர் அளவுக்கு கட்டணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. பலருக்கும் தங்களது கணக்குகள் ஊடுருவப்பட்ட விஷயம் உடனடியாகத் தெரிவதில்லை. முன்பு பாதுகாப்பு நிபுணர்கள் மட்டுமே மென்பொருளின் தவறுகளை திருத்த ஏஐ-ஐ பயன்படுத்தினர். ஆனால் இன்று மிகக் குறைந்த கணினி அறிவு கொண்டவர்கள் கூட ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி விநாடிகளில் வைரஸ்களை உருவாக்கவும், தானாகவே இணையதளங்களை தாக்கவும் முடிகிறது. அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் மேலும் பல நிறுவனங்களின் தகவல்கள் கசிந்த விவரங்கள் வெளிவரலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தங்களுடைய மென்பொருட்களை உடனுக்குடன் அப்டேட் செய்து பாதுகாப்பை பலப்படுத்தாவிட்டால், எந்தவொரு இணையதளமும் ஏஐ தாக்குதலுக்கு எளிதில் இரையாகிவிடும் என்பதை இந்த 'பிளாக் அக்டோபர்' நிகழ்வுகள் உலகிற்கு தெளிவாக உணர்த்தியுள்ளன.இணைய உலகை அதிர வைத்த 'பிஎச்பி' பாதுகாப்பு ஓட்டை
முடக்கப்பட்ட அரசு தளங்கள் மற்றும் வங்கி அமைப்புகள்
ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை! ஏஐ வந்து அதுவும் போச்சு.. 4 மடங்கு சர்வர் விலை: ஸ்ரீதர் வேம்பு
சாமானியர்களுக்கு இது எப்படி ஆபத்தாகிறது?
வெடித்து சிதறிய பெங்களூர் விதான சவுதா.. ரீல்ஸ்க்காக ஏஐ வீடியோ போட்ட பீகார் தொழிலாளி கைது
ஏஐ: பாதுகாப்பா? புதிய ஆபத்தா?