அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம்

  • சென்னை: அரசியல் என்ட்ரி குறித்து ராகவா லாரன்ஸ் பேசியிருந்தது விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், எதற்கெடுத்தாலும் அம்மா சென்டிமென்ட் என்று அறுக்காதீங்க என பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன பேசினார் லாரன்ஸ்? எதற்காக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    திரைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்த விஜய், மிகப்பெரிய வெற்றியை பெற்று தற்போது முதலமைச்சராகியிருக்கிறார். இப்படி இருக்கையில்தான் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகை குறித்து பேசியிருந்தார்.

    Advertisement

    அரசியல் என்ட்ரி

    சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஒரு வீடியோவை போட்டியிருந்தேன். அதில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று கேட்டிருந்தேன். இதற்கு வயது வித்தியாசம் இல்லாமல் வரவேற்பு இருந்தது. நான் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். விரைவில் அனைத்து ரசிகர்களையும் வரவழைத்து, என்னுடைய அம்மாவை வைத்து அந்த விஷயத்தை சொல்ல இருக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு முக்கியம். என்னை உரிமையோடு அரசியலுக்கு அழைக்கின்றனர்.. என் அம்மாவின் முன்னிலையில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்" என்று கூறியிருந்தார்.

    நல்ல முடிவு எனில், அரசியலுக்கு வரப்போகிறீர்களா? திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் பதிலளித்த லாரன்ஸ்,

    Advertisement

    நல்ல முடிவு

    "நான் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறேன். அதை விரைவில் அறிவிப்பேன். அரசியலுக்கு வர விருப்பம் இருந்தால் உடனே வர வேண்டியதுதானே! ஏன் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்? என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவேதான் மக்களிடம் நான் கேட்டேன். இது என்னுடைய பாணி" என்று கூறியிருந்தார்.

    இதுவரை எல்லாம் ஓகேதான்.. ஆனால், இதற்கு பின்னர் பேசிய விஷயத்தில்தான் பிரச்சனையே தொடங்கியது. அதாவது முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் கடந்த ஒரு மாதக்கால செயல்பாடு எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்ப..

    Advertisement

    தவெக அரசு

    "அரசுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது. புதிய ஏரியாவில் வாடகை வீட்டுக்கு போகிறோம் என்றால், அந்த வாடகை வீடு வெளியே பார்க்கும்போது நன்றாக இருக்கும். வீட்டுக்குள் போனால் தான் எங்கே பைப் சரி இல்லை, எங்கே ஃபேன் சுத்தவில்லை, எந்த இடத்தில் பெயிண்ட் கொட்டுகிறது என்று தெரியும். ஒரு வீட்டுக்கு போவதற்கே அப்படி இருக்கிறது.

    தெரு நாய்கள்

    ரோட்டில் இருக்கக்கூடிய தெருநாய் கூட நம்மை பார்த்தால் 'யார் அது புது ஆள் வந்திருக்கிறார்கள்' என்று கத்தும். அந்த தெரு நாய்க்கு புடிச்ச பிஸ்கட் போட வேண்டும், ஒரு சில தெருநாய்கள் எல்லாம் பிஸ்கட் சாப்பிடாது, நான்வெஜ் தான் சாப்பிடும். அதற்கு பிடித்த மாதிரி செய்து போட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாய்க்கு, ஒரு வீட்டுக்கு இவ்வளவு ஆகிறது என்றால்... ஒரு நாட்டை கொடுக்கும் பொழுது அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்" என் பேசியிருந்தார்.

    Advertisement

    அம்மா சென்டிமென்ட்

    அப்படி எனில், அரசு மீது விமர்சனங்களை அடுக்குபவர்களை தெருநாய்களுடன் லாரன்ஸ் ஒப்பிட்டு பேசுகிறாரா? என்று சர்ச்சை வெடித்தது. இதற்கு விளக்கமளித்த அவர், "என் தாய்க்கு நிகரான மக்களை நாய் என்று சொல்லும் மனிதநேயமற்றவன் நான் கிடையாது" என்று கூறியிருந்தார்.

    டென்ஷனான ப்ளூ சட்டை மாறன்

    பிரஸ் மீட்டிலும் சரி, அரசியல் என்ட்ரி குறித்து பேசும்போதும் சரி, சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும்போதும் சரி.. எல்லா இடத்திலும் அம்மா, அம்மா என்று ஏன் லாரன்ஸ் பேச வேண்டும்? அவர் மட்டும்தான் அம்மா மீது பாசம் வைத்திருக்கிறாரா? எங்களுக்கு கிடையாதா? என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    அதேபோல ப்ளூ சட்டை மாறன், "தமிழ்நாட்டில் நீங்கள் மட்டும்தான் தாய்ப்பாசம் உள்ளவரா? எதற்கெடுத்தாலும் அம்மா சென்டிமென்ட்டை கேடயமாக்கி அனுதாபம் தேடி அறுக்க வேண்டாம். ஓவர் புல்லரிப்பு உடம்புக்கு ஆகாது. புதுசா ட்ரை பண்ணுங்க." என்று ட்வீட் செய்துள்ளார்.

    English Summary

    Blue Sattai Maran Slams Raghava Lawrence: While Raghava Lawrence's remarks regarding his potential entry into politics have sparked debate, popular YouTuber 'Blue Sattai' Maran has caused a stir by telling him not to keep harping on the "mother sentiment" at every opportunity.