தலையில் துண்டு போட்ட சிறுத்தை! முதுகில் அடித்த திருமாவளவன்! ஏதேனும் குறியீடா? ப்ளூசட்டை மாறன் கேள்வி

  • சென்னை: விசிக மாநாட்டில் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கட்சித் துண்டை நிர்வாகி ஒருவர் அணிவிக்க முயன்ற போது தவறுதலாக அவரது தலையில் போட்டது குறித்து ப்ளூசட்டை மாறன் கிண்டலாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் "தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், இலங்கை அரசு புதிதாக வரையறுக்கவுள்ள அரசியலமைப்பு சட்டம், கடந்த 77 ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் இன பாகுபாடு, அரசியல் உரிமைகள் மறுப்பு, இன நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தமிழர் அடையாள சிதைப்பு போன்றவற்றை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமையும் என அச்சம் தமிழர்களிடையே மேலோங்கியுள்ளது.

    Advertisement

    அரசியல் களத்தில் இனி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே விடுதலைச் சிறுத்தைகள் பயணிக்கும். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விசிக என்பதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம்.

    வருங்காலத்தில் விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தோம். இனி விசிகவும் ஆளும் கட்சியாக மாறும்.

    அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தோம். இன்று முதல்வர் ஜோசப் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி தமிழக அரசியல் களத்தில் தவெகவுடன் விசிக இணைந்தே பயணிக்கும். இந்த மாநாட்டின் 125 தீர்மானங்களும் சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படும். விசிக தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார்.

    Advertisement

    5 நிமிடங்களுக்கு உள்ளேயே பேச்சை முடித்துக் கொண்டார் திருமாவளவன். கட்டுக்கடங்காத கூட்டத்தால் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி என்று விரைவில் பேச்சை முடித்துக் கொண்டார்.

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. அப்போது திருமாவளவனை பார்க்க நிர்வாகிகள் முண்டியடித்தனர். ஒரு சிலர் அவருக்கு கட்சித் துண்டை அணிவிக்க முயன்றனர். அப்போது ஒருவர் துண்டு அணிவிக்க முயன்ற போது திருமாவளவனின் தலையில் போட்டுவிட்டார். உடனே கோபமடைந்த திருமாவளவன் அந்த நபரின் முதுகில் ஓங்கி அடித்தார். இதை ப்ளூசட்டை மாறன் கிண்டலாக பேசியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமா தலையில் துண்டு போட்ட சிறுத்தைகள். முதுகில் அறைந்த திருமா.

    தலையில் துண்டு போட்டது‌ ஏதேனும் குறியீடா? என குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Blue sattai Maran teases Thirumavalavan for a cadre put party towel on his head.