ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..வசமாய் சிக்கிய ‘பாம்’ சரவணன்! பரபரப்பான கோர்ட்.. சீரியஸாகும் விசாரணை

  • சென்னை: 6 கொலை வழக்குகள், 37 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாம் சரவணனை போலீசார் கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பாம் சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏதும் திட்டத்துடன் பாம் சரவணன் பதுங்கி இருந்தாரா என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    Advertisement

    சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான சரவணன் என்கிற பாம் சரவணன். சரித்திரப் பதிவேட்டில் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியாக உள்ள இவர் மீது, 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 37 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி எம்.கே.பி. நகர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பாம் சரவணன், பின்னர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை தீர்த்துக்கட்ட சில ரவுடி கும்பல் திட்டமிட்டதாகவும் போலீஸ் வட்டாரங்களில் தகவல்கள் உலாவின.

    பாம் சரவணன்

    இதனால், புளியந்தோப்பு பகுதியில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி, கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை அன்னை இந்திரா நகர் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குடன் பாம் சரவணன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    சென்னை போலீஸ்

    இதன் காரணமாக, அவரை எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் கொலை செய்ய திட்டமிட்ட தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை, புளியந்தோப்பு போலீசாரும், தீவிர ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர்.

    சுற்றி வளைத்து கைது

    இந்த நிலையில், திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக, தனது மனைவி மகாலட்சுமி மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் வந்தார் பாம் சரவணன். அப்போது அவரை தீவிர ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். சாதாரண உடையில் இருந்த போலீசார் பாம் சரவணனை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது, அவரது மனைவி மற்றும் வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சம்பவத்தை வீடியோவும் பதிவு செய்தனர்.

    Advertisement

    போலீசார் விசாரணை

    இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாம் சரவணனை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், புளியந்தோப்பு காவல் நிலைய த்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப் பட்டது. சென்னையில் தற்போது செயல் பட்டு வரும் முக்கிய ரவுடிகள், அவர்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    37 வழக்குகள்

    இதையடுத்து, புளியந்தோப்பு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் பாம் சரவணனை கைது செய்த போலீசார், நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 37 வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் பிரபல ரவுடி பாம் சரவணன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் உள்ள ரவுடிகள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் சென்னை போலீசார்.

    English Summary

    Chennai police arrest history-sheeter Bomb Saravanan in an attempted murder case and intensify probe into his alleged criminal links.