பெரியார் அறிவுலக நூலக புத்தக மோசடி! திமுக ஆட்சியில் நடைபெறவில்லை.. உறுதியாக சொன்ன உதயநிதி

  • சென்னை: பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் யார் ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது என திமுக - தவெக இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் கருத்து யுத்தமே நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இது தி.மு.க ஆட்சியில் நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். நாங்கள் முறையான விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

    Advertisement

    கோவை பெரியார் நூலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரனையில் போலியான பெயர்களில், முழுக்க முழுக்க தவறான தகவல்களுடன் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    Advertisement

    திமுக தவெக வார்த்தை யுத்தம்

    300 ரூபாய் கூட மதிப்பில்லாத புத்தகங்களை 1,500 ரூபாய் - 2,000 ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போலி நூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் இந்த முறைகேடுகள் நடைபற்றதாக தவெக குற்றம் சாட்டி வரும் நிலையில், சர்ச்சையில் சிக்கிய புத்தகங்களில் ஜூன் மாதம் முத்திரை இருப்பதாக கூறி திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    துரைமுருகன் வீட்டில் பெண் எடுத்ததால் திருடனா? திமுக பினாமியா நான்? தயாரிப்பாளர் கண்ணன் ரவி குமுறல்
    Advertisement

    இந்த விவகாரத்தில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே இணையத்தில் கருத்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ரியாக்ட் செய்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தவெக எதற்குமே உரிய பதில் சொல்வது இல்லை.

    உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

    தி.மு.க ஆட்சியில் இந்த முறைகேடு நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன்.. நாங்கள் முறையான விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம்.. புத்தகங்களின் எழுத்தாளர்கள் பெயரை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். தவெக ஆட்சியில் நடைபெற்றது என்பது தெளிவாக தெரிகிறது" என்றார்.

    Advertisement

    முன்னதாக திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெரியார் அறிவுலக நூலக புத்தக மோசடி விவகாரத்தில் தவெக அரசை விட்டு விளாசினார். பரந்தாமன் கூறுகையில், "தமிழ்நாட்டின் முதல்வர்கள் செய்த சாதைனையில் சிறிய துளி கூட இவர் (விஜய்) செய்யவில்லை. எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது எதுக்காகவாது விஜய் வாய் திறந்தாரா? இதற்கு மட்டும் ஏன் வாய் திறக்கிறார்.

    செட் பண்ணி கொடுத்த டயலாக்கை டெலிவரி பண்ண வந்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசு தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு திமுக மீது ஊழல் ஊழல் என பரப்புவதை மட்டுமே வைத்து இருக்கிறது என்றால் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். திமுக மீது பழி சுமத்துவதுதான் இவர்கள் வேலை. புத்தகங்கள் அனைத்தும் யார் கொள்முதல் செய்தார்கள். எவ்வளவு கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் அதிகாரத்தில் இருக்கும் தவெக வெளியிடவில்லை. தவெக ஐடி விங் வெளியிட்டு வருகிறது.

    Advertisement
    “புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்”- அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்

    குற்றச்சாட்டு வருகிறது என்றால் அரசிடம் இருந்துதான் விளக்கம் வர வேண்டும். திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மையோடு, புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் எந்த தேதியில் வாங்கப்பட்டது. ஜூன் மாதம் வாங்கப்பட்ட புத்தகங்களில் தான் பிரச்சனை வந்துள்ளது. திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் விதமான பிரச்சனைகள் இல்லை' என்று கூறியிருந்தார்.

    English Summary

    Udhayanidhi Stalin: Amidst a fierce war of words on social media between the DMK and the TVK (Tamizhaga Vetri Kazhagam) over whose administration saw irregularities in the procurement of books for the 'Periyar Arivulagam' (Periyar Knowledge World) project, Leader of the Opposition Udhayanidhi Stalin addressed the issue, stating, "I am 100% certain that this did not happen during the DMK's tenure. We are prepared for a proper investigation."