கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால்... 4 மணி நேரத்தில் டெலிவரி! யாருக்கெல்லாம் இந்த வசதி?

  • சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த ஹேப்பி நியூஸ் சொல்லி உள்ளது.. வீட்டில் சமையல் கேஸ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் புதிய சேவையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. அதை பற்றி விவரமாக இங்கே பார்ப்போம்..!!

    Advertisement

    பொதுவாக நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு கேஸ் சிலிண்டர்கள் மிகவும் கனமாக இருக்கும். அத்துடன் அதில் எவ்வளவு கேஸ் பாக்கி இருக்கிறது, இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது.

    Advertisement

    சமையல் சிலிண்டர் பயன்பாடு

    இதுபோன்ற கஷ்டங்களையெல்லாம் தவிர்க்கும் பொருட்டு, சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் வகையில் எடை குறைவாகவும், சிலிண்டரின் உட்புறம் தெரியும் வகையிலும் டிசைன் செய்யப்பட்டுள்ள புதிய ரக உருளைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் "எச்பி நாவ்யா" என்ற பெயரில் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடைகளில் இந்த சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மீனம்பாக்கம், வேளச்சேரி. ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் இவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த சிலிண்டர்கள் துருப்பிடிக்காது.. இவற்றை எளிதாக கையாளலாம்...

    Advertisement

    5 கிலோ சிலிண்டர் 3500 ரூபாய்

    இப்போது 5 கிலோ சிலிண்டர் 3500 ரூபாய் விலையிலும், 10 கிலோ சிலிண்டர் ரூ.5002 விலையிலும் கிடைக்கிறது. விரைவில் செல்போன் ஆப்கள் மூலமாக ஆர்டர் செய்யும் வசதியும் தொடங்கவுள்ளது.

    அதுபோலவே இந்தியன் ஆயில் நிறுவனம் "இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்" என்ற பெயரில் 10 கிலோ சிலிண்டரையும், 4 மணி நேர அதிவேக டெலிவரி சேவையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் நீங்கள் புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் வீட்டிற்கு வந்துவிடும். அல்லது உங்களுக்கு எந்த நேரம் வசதியோ அந்த நேரத்தை சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

    Advertisement

    இதே 4 மணி நேர டெலிவரி வசதி, சிறிய அளவிலான 5 கிலோ "இண்டேன் சோட்டு" சிலிண்டருக்கும் வழங்கப்படுகிறது. குறைவான ஆவணங்களுடன் இந்த சேவையை பெறலாம் என்பதால், வாடகை வீட்டில் தங்குபவர்கள், தனியாக தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    4 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர்

    இந்த சேவை முதற்கட்டமாக கோயம்புத்தூர், புனே, குருகிராம், இந்தூர் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 25 நகரங்களுக்கும், அக்டோபர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    எனவே வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போனில் "IndianOil ONE" ஆப் மூலமாகவோ அல்லது வெப்சைட் மூலமாகவோ புக் செய்யலாம். விரைவில் வாட்ஸ்அப் மூலமும் புக் செய்யும் வசதி வரவுள்ளது... கேஸ் ஏஜென்சிகள் மட்டுமல்லாமல், குறிப்பிட்ட சில இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் கூட இந்த சிலிண்டர்களை நேரடியாக வாங்கிக் கொள்ள முடியுமாம்...!!

    FAQ's

    சென்னை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் இனி எவ்வளவு நேரத்தில் வீட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது?

    முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் சிலிண்டர் வீட்டின் வாசலிற்கே வந்து சேரும் என்று அரசு எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிலிண்டர்கள் எந்த வகையில் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன?

    தற்போதைய கூட்டுழைம (Composite) சிலிண்டர்கள் எடை குறைவாக இருக்கும் வகையிலும், உள்ளே இருக்கும் எரிவாயு அளவை வெளியில் இருந்து பார்க்கும் வசதி உள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்திய சிலிண்டர்கள் எந்த பெயர்களிலும் எந்த எடைகளிலும் உள்ளன?

    இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் “எச்பி நாவ்யா” என்ற பெயரில் 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    10 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களின் விலை என்ன என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

    5 கிலோ சிலிண்டர் 3,500 ரூபாய்க்கும், 10 கிலோ சிலிண்டர் 5,002 ரூபாய்க்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    4 மணி நேர விநியோக சேவையை எங்கே முன்பதிவு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது?

    வாடிக்கையாளர்கள் “IndianOil ONE” மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்; மேலும் விரைவில் வாட்ஸ்அப் மூலமும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    Oil companies have launched a rapid 4-hour delivery service for cooking gas to support households. Alongside this, new lightweight composite fiber cylinders, such as HP Navya and Indane ExtraLite, have been introduced in major cities. These innovations aim to provide greater safety, convenience, and monitoring capabilities for daily gas users.