அட்லீ சொல்ற அரசியலை நம் குழந்தைகள் கற்றால்.. போச்சு! போஸ் வெங்கட் போஸ்ட்

  • சென்னை: இயக்குநர் அட்லீ சொல்லும் அரசியல் கற்றலை குழந்தைகள் கற்றுக் கொண்டால் ஆபத்தை விளைவிக்கும் என இயக்குநர் போஸ் வெங்கட் வேதனை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து போஸ் வெங்கட் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அடுத்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள் அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து மு.க.ஸ்டாலினில் முடிந்ததாக கருதுகிறேன்.

    Advertisement

    இந்த தலைமுறை தவறான அரசியலை கற்றுக் கொள்கிறது. இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும். முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகும். பிள்ளைகள் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காரல் மாக்ஸ். லெனின், மாவோ! என இவர்களை படித்து நல்ல புரட்சிகரமான கருத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டும்..

    இயக்குனர் அட்லி சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அட்லீ கலந்து கொண்டார்.

    Advertisement

    அப்போது அவர் முதல்வர் விஜய் குறித்தும் தமிழக அரசியல் குறித்தும் பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் அரசியல் அனைவருக்குமானது, அரசியல் நமக்கானது அல்ல என இரு வேறு கருத்துகளையும் அவர் தெரிவித்திருப்பது இணையத்தில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

    அட்லீ பேசுகையில், தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு எனது உழைப்பு முக்கிய காரணமாக இருந்தாலும் விஜய் வழங்கிய வாய்ப்புகள் எனது பயணத்தில் முக்கிய பங்கு வகித்தன. ராஜா ராணி படத்தின் மூலம் எனக்கு அடையாளம் கிடைத்தது. அதன் பிறகு விஜய் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார்.

    அரசியல் நமக்கானது அல்ல, நான் அரசியல்வாதி இல்லை, எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை கூட குழந்தைகள் பார்க்கும் அளவுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள், அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். அதில் சந்தேகமே கிடையாது. அரசியல் எல்லாம் நல்லதல்ல; சரிவாராது என்றெல்லாம் முன்பு சொல்வார்கள். ஆனால், அது மாறியிருக்கிறது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது மூளையைப் பொருத்தது. யாரும் நம்மை பாதிக்க முடியாது. இவ்வாறு அட்லீ தெரிவித்துள்ளார்.

    English Summary

    Bose Venkat criticises Director Atlee in learning new politics as he speaks in music release function of Paththa.