காலை உணவு திட்டத்தில் அதிரடி முடிவு.. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு எதிர்ப்பு

  • சென்னை: காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க இரு வேளையும் ஒரே ஆசிரியரை கண்காணிப்பு ஆசிரியாக நியமனம் செய்யும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்சென்ட் திவ்யா, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு தொடந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6.7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனை கண்காணிக்க செயல்முறைகள் வகுக்கப்பட்டுபள்ஏஇயில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சுயற்சி முறையில் கண்காணிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது காலை 8.30 முதல் 8.50 வரை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வழங்க வேண்டும் என்றும் அதற்கு முன்னர் கண்காணிப்பு ஆசிரியர் காலை உணவை சாப்பிட்டு சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று செயல்முறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்கு பதிலாகப் புடவையை போர்த்தினாரா நயினார்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் வெளியிட்ட அறிக்கையில், "காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஆசிரியர் ஒருவர் காலை 8.39 மணிக்குள்ளாக வருகை தந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மாணவர் வருகைக்கு ஏற்ப காலை உணவை தான் சாப்பிட்டு சரி பார்த்து பின்பு மாணவர்களுக்கு கவனத்துடன் பரிமாறப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க ஒரு ஆசிரியரை தனியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வருத்தமடைய செய்து உள்ளது,

    Advertisement

    காலை கண்காணிக்கும் ஆசிரியர் மதியமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்போது அவர் எப்படி மாணவர்களுக்கு பாடம் போதிக்க முடியும். ஒரு ஆசிரியர் தொடர்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் எப்படி பணியாற்ற முடியும் என தெரியவில்லை. பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் இரு ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். இத்திட்டம் முழுக்க முழுக்க சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    அத்துறை சார்ந்தவர்கள்தான் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு துணையாக மாணவர்களை ஒழுங்குப்படுத்தி கவனத்துடன் பரிமாறுவதற்கு உதவியாக சுழற்சி முறையில் காலையில் ஒரு ஆசிரியரும், மதியம் ஒரு ஆசிரியரும் கண்காணிக்க பயன்படுத்துவதே சரியானதாக இருக்குமே தவிர, காலை மற்றும் மதியம் என இரு வேளைக்கும் ஒரே ஆசிரியரை கண்காணிப்பு ஆசிரியராக நியமிப்பது சரியானதாக இருக்காது.

    Advertisement
    ஒரு வழியாக வந்தது நல்ல செய்தி.. இன்னும் 4 நாட்களே இருக்கு.. 'தமிழ்நாடு வெதர்மேன்' குட்நியூஸ்

    எனவே கண்காணிப்பு ஆசிரியர் நியமன அறிவிப்பை திரும்பபெற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்சென்ட் திவ்யா, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The Tamil Nadu Government Employees and Teachers Welfare Federation has urged School Education Minister Rajmohan, School Education Secretary Innocent Divya, School Education Director Latha, and Elementary Education Director Naresh to withdraw the order appointing the same teacher to supervise both the breakfast and midday meal schemes.