சென்னை: தமிழக சட்டசபையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும், அரசியல் காய்நகர்த்தல்கள் நிறைந்ததாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விவாதங்களின் போது சட்டமன்றத்திற்குள் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் போர்கள் நடப்பதே வழக்கம்.
ஆனால், தற்போது சட்டசபைக்குள்ளேயே நடைபெற்று வரும் சில எதிர்பாராத சம்பவங்கள் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவும், எதிர்க்கட்சியான திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே, தங்களுக்குள் மிகவும் நெருக்கமாகவும், நட்புடனும் உரையாடிக் கொண்ட காட்சிகள் திமுக தலைமைக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. வெளியே அரசியல் மேடைகளிலும், பொதுவெளியிலும் திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, "திமுகவை வேரறுப்போம்" என்ற நோக்கில் தீவிர காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வரும் ஆதவ் அர்ஜுனாவுடன், திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவை நடவடிக்கைகளின் போதே இவ்வளவு இயல்பாக சிரித்துப் பேசி அரட்டை அடிப்பது அக்கட்சியின் உயர்மட்ட தலைமையை, குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக அதிருப்தியடையச் செய்துள்ளது. தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, இளைஞர்களை கவர்வதில், சமூக ஊடகப் பிரச்சாரங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆதவ் அர்ஜுனாவிற்கும் இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து திமுகவின் கொள்கைகள், ஆட்சி நிர்வாகம் மற்றும் குடும்ப அரசியல் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். இத்தகைய சூழலில், சட்டமன்ற விவாதங்களின் போது இருதரப்பும் கொள்கை ரீதியாக மோதிக் கொள்வார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். பொதுவாக மாற்று முகாமில் இருக்கும் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் நலம் விசாரிப்பது வேறு; ஆனால், சட்டமன்றத்தில் நேரடி விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, எதிர்தரப்பு தலைவருடன் இணக்கமாகப் பேசுவது சாதாரண விஷயமாகக் கடந்து செல்லப்படாமல், திமுகவுக்குள் பெரிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. அதிலும் உறவு சொல்லி பேசுவது எல்லாம் உதயநிதி காதுக்கு சென்று அவரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் போதே.. அவ்வப்போது திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் ஆதவ் அர்ஜுனா இருக்கும் பக்கம் திரும்பி, சிரித்த முகத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த தகவல், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் உதயநிதி ஸ்டாலின் மிகுந்த மனவருத்தமும் கோபமும் அடைந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்துப் பேசியபோது, மிகக் காரசாரமான ஒரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. நாம் களத்தில் நின்று நாள் முழுதும் போராடிக் கொண்டிருக்கிறோம். கட்சிக்கு எதிராக தொடர்ந்து விஷப் பிரச்சாரம் செய்து, நம்மைக் கடுமையாக எதிர்ப்பவர்களோடு, நம் கூடவே இருக்கும் மூத்த தலைவர்கள் கொஞ்சி குலாவிக்கொண்டு இருக்கிறார்கள்..." என்று உதயநிதி ஸ்டாலின் ஆதங்கத்துடன் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சித் தொண்டர்களும் இளைஞரணியினரும் எதிர்த்தரப்பின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்து, களத்தில் கடுமையாக உழைத்து வரும் வேளையில், சட்டமன்ற விவாதத்தின் போதே மூத்த தலைவர்கள் எதிரணி தலைவர்களுடன் இவ்வளவு இணக்கமாக நடந்து கொள்வது தொண்டர்களின் வீரியத்தைக் குறைத்துவிடும் என்பதே உதயநிதியின் முக்கிய கவலையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை, தொண்டர்களின் உழைப்பும், தலைமைக்குக் காட்டும் விசுவாசமுமே கட்சியின் பிரதான பலமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சட்டசபை நேரடி விவாதத்தின் போது நடைபெறும் இந்தச் சம்பவம், கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் எதிரணியினரை கடுமையாக விமர்சித்து விட்டு, சட்டமன்றத்திற்குள் அவையின் முக்கிய விவாதம் நடக்கும் போதே தலைவர்கள் இணக்கம் காட்டுவது, களத்தில் போராடும் சாதாரணப் தொண்டர்களின் வீரியத்தை குறைத்துவிடும் என்று கட்சியின் இளம் தலைவர்கள் கருதுகின்றனர். ஆதவ் அர்ஜுனா போன்ற தீவிர அரசியல் எதிரிகளுடன் மூத்த நிர்வாகிகள் அவை நடக்கும் போதே காட்டிய இந்த அணுகுமுறை, திமுகவின் இளைஞரணி வட்டாரங்களில் கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் போது கட்சி நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சில முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் கட்சி மேலிடத்தால் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிரும் புதிருமான அரசியல் களம்
கூடவே இருந்து எதிரிகளோடு கொஞ்சி குலாவுகிறார்கள்... - கொதித்த உதயநிதி!
உட்கட்சி கட்டுக்கோப்பு