விளையாட்டு மைதானத்தில் பேருந்து நிலையமா.. அமைச்சர் தமிழன் பார்த்திபனுடன் மக்கள் வாக்குவாதம்!

  • செங்கல்பட்டு: மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுவதால், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விடுமுறை நாட்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

    Advertisement

    அதேபோல் ஆயுத பூஜைக்கு 14,963 சிறப்பு பேருந்துகளும், தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க விளையாட்டு மைதானம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். விளையாட்டு மைதானத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டா, விளையாட்டு பயிற்சி பெறும் வீரர்கள், வீராங்கனை பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டனர்.

    Advertisement
    தீபாவளி பண்டிகை! ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்திற்கு ஹைகோர்ட் தடை!

    அப்போது தீபாவளி வரை மட்டும் இப்பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் தமிழன் பார்த்திபன் கோரிக்கை வைத்தார். அதேபோல் பேருந்து நிலையம் அமைக்க இது நிரந்தர இடம் கிடையாது என்றும், இது வெறும் சோதனை ஓட்டம் தான் என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும் பொதுமக்கள் நீண்ட நேரம் அமைச்சருடன் வாக்குவாதம் செய்தார்.

    English Summary

    Bus Stand: Public Clash With Minister Tamizhan Parthiban Over Bus Stand Operations in Maraimalai Nagar