சைக்கிளில் இருந்து விழுந்த எம்எல்ஏ.. கண்டுகொள்ளாமல் எஸ்கேப்பான புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா?

  • சென்னை: தாராபுரம் தொகுதியில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த சைக்கிள் பேரணியின் போது, எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தடுமாறி கீழே விழுந்தார். அதனை பார்த்துவிட்ட போதும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கண்டுகொள்ளாமல் சைக்கிள் ஓட்டிக் கொண்டே விலகி சென்றார். இதன் பின்னணி தொடர்பாக விசாரிக்கையில் பல்வேறு சம்பவங்கள் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    அண்மையில் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் அமைச்சர்கள் அருண்ராஜ், பிரபு, விஜய் பாலாஜி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    Advertisement

    இந்த பேரணியின் போது தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா திடீரென தடுமாறி கீழே விழுந்தார். இதனால் விஜயபாஸ்கர், அருண்ராஜ் உள்ளிட்டோர் பதற்றம் அடைந்து சைக்கிளை நிறுத்திய போதும், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை. அப்படியே சைக்கிள் பேரணியை தொடர்ந்து நடத்தினார். புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரித்த போது, பல்வேறு தகவல் வெளி வந்திருக்கிறது.

    அன்றைய நாளில் புஸ்ஸி ஆனந்த், ஜெகநாத் மிஸ்ராவை கண்டுகொள்ளாமல் செல்லவில்லையாம். அவர் கீழே விழுந்த போதும், அப்பாடி.. எஸ்கேப் ஆகிருவோம் என்று சைக்கிளில் சென்றிருக்கிறார். கம்பம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்டு வென்ற ஜெகநாத் மிஸ்ரா, பின்னர் தனது கட்சியை தவெகவுடன் இணைத்துவிட்டார்.

    Advertisement

    அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம் தான். இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் அமைச்சர்களை சந்தித்த போது சில தேவைகளை கூறி இருக்கிறார். குறிப்பாக குவாரிகள் தொடர்பாக சில டெண்டர்களை அமைச்சரிடம் கோரி இருக்கிறார். ஆனால் அமைச்சர் தரப்பில் எல்லாமே மேலிடம் எடுக்கும் முடிவு என்று தான் நழுவி இருக்கிறார்.

    தொடர்ந்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் வந்து, என்ன அண்ணே.. ஒரு தொகுதி மாவட்டச் செயலாளர் பதவி மட்டும் கொடுத்துருக்கீங்க.. துணை பொதுச்செயலாளர் பதவி கொடுங்க அண்ணே என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த புஸ்ஸி ஆனந்த், ஆளை விட்டால் சரி என்று சைக்கிளில் ஓடி சென்றிருக்கிறார்.

    English Summary

    Bussy Anand: Reason behind Bussy Anand Ignores and Rides Away after MLA Jagannath Mishra Falls Off Cycle During Rally