தவெக பெயரில் மோசடி பண்ணா கட்டிப்போட்டு போலீசை கூப்பிடுங்க.. அமைச்சர் புஸ்சி ஆனந்த் பேச்சு!

  • சென்னை: எங்க பேரை சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தாரேன்.. டெண்டர் வாங்கி தாரேன்னு யாராவது சொன்னா அவுங்களை கட்டிப்போட்டு வைங்க.. போலீஸ் கிட்ட சொன்னா உடனே வந்து புடிச்சிடுவாங்க.. என்று அமைச்சர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார். மேலும், யார் எது செய்தாலும் தவெகவை சேர்ந்தவர்.. தவெக உறுப்பினர் என்று அவுங்களாகவே டிசைன் பண்ணி போட்டு விடுகிறார்கள். இது ஏன் பண்ணுறாங்கன்னு தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

    Advertisement

    தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:- ஊழல் இல்லாத ஆட்சியை முதல்வர் விஜய் தந்து கொண்டிருக்கிறார் . இன்னும் 20 வருடங்கள் அந்த ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறும். எங்க பேரை சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தாரேன்.. டெண்டர் வாங்கி தாரேன்னு யாராவது சொன்னா அவுங்களை கட்டிப்போட்டு வைங்க.. போலீஸ் கிட்ட சொன்னா உடனே வந்து புடிச்சிடுவாங்க..

    Advertisement

    எங்களுடன் எல்லாரும் போட்டோ எடுக்கிறாங்க.. போட்டோ எடுக்கும் போது வராதீங்க என்று சொல்ல முடியாது. போட்டோ எடுப்பவர்களில் 99 சதவீதம் பேர் நல்லவர்களாக இருந்தால் 1 சதவீதம் எடக்கு மடக்கான ஆள் வந்து எடுத்துருவாங்க.. உடனே இவருடன் நாங்கள் இருந்தோம் என்கிறார்கள். எங்களுக்கு என்ன தெரியும். நாங்கள் பாட்டுக்கு செவனே என்று இருக்கிறோம். நாங்கள் உண்டு.. எங்கள் வேலை உண்டு என்று இருக்கிறோம். நீங்க பாட்டுக்கு வந்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு, ஏதோ ஒரு இடக்கு மடக்கான ஆள் எடுத்தால் அதற்கு நாங்களா பொறுப்பு..

    Advertisement

    அதை உடனே ஒரு பத்திரிகையில், யார் எது செய்தாலும் தவெகவை சேர்ந்தவர்.. தவெக உறுப்பினர் என்று அவுங்களாகவே டிசைன் பண்ணி போட்டு விடுகிறார்கள். இது ஏன் பண்ணுறாங்கன்னு தெரியவில்லை. விஜய் தான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.. பிறகு ஏன் இப்படி பண்ணுறாங்க என்று தெரியவில்லை. ஏதாவது தப்பா இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்.. தப்பாக இருந்தால் கண்டிப்பாக திருத்திக்கொள்வோம். அப்படித்தான் முதல்வர் எங்களை வழிநடத்துகிறார்.

    மாற்று கட்சியில் இருந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் சொல்வது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களிடம் வாருங்கள்.. மக்களுக்கு என்ன தேவை.. என்ன செய்ய வேண்டும்.. மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லுங்கள் உடனே நாங்கள் செய்து தருகிறோம். வேறு எதையாவது நினைத்துக்கொண்டு யாரும் வரவேண்டாம் என்று சொல்வோம்.

    Advertisement

    அவர்கள் சொல்கிறார்கள்.. எங்களுக்கு தூய்மையான ஆட்சியை முதல்வர் கொடுக்கிறார். அதற்காகத்தான் நாங்கள் வருகிறோம். எங்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் தேவையில்லை என்று சொல்லக்கூடிய நல்ல மனிதர்கள்.. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வருகிறார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Bussy Anand warned the public against fraudsters claiming they can secure transfers or government contracts using TVK's name. He urged people to detain such individuals and inform police immediately, adding that many are falsely portrayed as TVK members without any connection.