“நீங்களாவது 5 ஆண்டுதான் டென்ஷன்... நாங்க தினம் தினம் டென்ஷன்”.. பேரவையில் புஸ்ஸி ஆனந்த் கலகலப்பு

  • சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இடையே சுவாரஸ்யமான வார்த்தைப் போர் நடைபெற்றது. "நீங்களாம் ரிலாக்ஸா இருக்கீங்க, நாங்கள் எல்லாம் டென்ஷனாக இருப்போம்" என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார். இதைத்தொடர்ந்து, "நீங்களாவது 5 ஆண்டுகள்தான் டென்ஷனாக இருந்தீர்கள், நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்" என புஸ்ஸி ஆனந்த் பதிலடி கொடுத்தார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைகளுக்குப் பிறகு இன்று சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது.

    Advertisement

    சட்டசபையில் முதல்வர் விஜய், அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.

    அப்போது, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறியிருந்தார். அந்த வகையில், இந்த வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றம்தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்தித்தாள், தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு துறை அமைச்சரைத் தொடர்புகொண்டு பேசுவோம்.

    Advertisement

    காலையில் 4 மணிக்கு எல்லாம் போன் வரும். 5 ஆண்டு காலம் நாங்கள் டென்ஷனாக இருந்தோம், நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். நீங்களாம் ரிலாக்ஸா இருக்கீங்க அதுதான் ஆச்சர்யமா இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரிகள், நாங்கள் எல்லாம் டென்ஷனாக இருப்போம் என்று பேரவையில் அவர் பேசியதால் சபாநாயகர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர் குழுங்கி குழுங்கி சிரித்தனர்.

    அப்போது, அவருடைய பேச்சுக்கு புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துப் பேசுகையில், நேற்று இரவிலும், இன்று காலையிலும் என முதலமைச்சர் சிறிய வாய்க்கால் பிரச்சனைக்கு கூட போனில் அழைத்து அந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டதா என்று கேட்கும் முதலமைச்சராகத் தான் இருக்கிறார். நீங்களாவது ஐந்து ஆண்டுகள் தான் டென்ஷனாக இருந்தீர்கள். நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம். எந்தவொரு விஷயமாக இருந்தால் மிகுந்த பயம் எங்களுக்கு இருக்கிறது என்று கூறினார்.

    Advertisement

    அதைத் தொடர்ந்து, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகத்தான் இருக்கிறார். எல்லா கட்சித் தொண்டர்களையும் பார்த்து புதிதாக வந்த இயக்கம். 1996 இல் எங்களை நிறைய இளைஞர்கள் வந்து கேட்பார்கள். இனிமேல் தான் உங்களுக்கு இதைப் பற்றி உங்களுக்குத் தெரியும். மேடையில் பேசுவது எளிது, நடத்தும்போது தான் கஷ்டம் தெரியும். நீங்கள் வந்து 3 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது.

    விவசாயிகள் போராட்டமில்லாமலேயே 5 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். அதைப் பாராட்ட வேண்டும். முதன்முதலாக தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தும்போது பெரிய போராட்டம் வெடித்தது. இங்குள்ள அமைச்சர் பெருமக்கள பலர் விவசாயம் செய்கின்றனர் என்று பேசினார்.

    English Summary

    Bussy Anand responded to MRK Panneerselvam’s remarks in the Tamil Nadu Assembly, saying that while they were tense for five years, the new government is under pressure every day.