வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை! வாக்காளர்கள் அறிய வேண்டிய விவரம்

  • சென்னை: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை தருகின்றனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க செல்லும் முன்பாக தங்கள் செல்போனை வீட்டிலேயே வைத்து செல்வது நல்லது. ஒருவேளை எடுத்துச்சென்றாலும் வாக்குச்சாவடிக்கு வெளியே பணியில் இருக்கும் ஊழியரிடம் கொடுத்துவிட்டு சென்று விடுங்கள்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. செல்போன் வைத்து இருப்பதற்காக பிரத்யேக இடம், குடிநீர், சாய்வு தள வசதி உள்ளிட்டவை வாக்குச்சாவடி அருகிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    எனவே வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் முன்பாக தங்கள் செல்போனை வீட்டிலேயே வைத்து செல்வது நல்லது. ஒருவேளை எடுத்துச்சென்றாலும் வாக்குச்சாவடிக்கு வெளியே பணியில் இருக்கும் ஊழியரிடம் கொடுத்துவிட்டு சென்று விடுங்கள். மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் தேர்தல் அமைதியாகவும் முறையாகவும் நடைபெற தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பூத் சிலிப் உடன் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து சென்று வாக்களிக்கலாம். பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், ஓட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருந்தால் வாக்களிக்க முடியும்.

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பணியாளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 60 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 18 வாக்குச்சாவடிகளும் பதற்றமனாவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 1,140 பணியாளர்களும், தாராபுரம் தொகுதியில் 1,486 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை மொத்த வாக்காளர்கள்: 2,13,689. ஆண் வாக்காளர்கள் 1,04,886, பெண் வாக்காளர்கள் 1,08,738, மூன்றாம் பாலினத்தவர் தோராயமாக 65 பேர் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 285 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 13 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    English Summary

    By-election are currently underway in the Madhuranthakam and Dharapuram constituencies, which have generated significant anticipation. Voters are arriving enthusiastically to cast their votes. It is advisable for voters to leave their mobile phones at home before heading to the polling station; however, if you do carry one, please hand it over to the staff on duty outside the polling station before proceeding inside.