சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக அபார வெற்றியை பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையை தக்க வைத்த நிலையில், தாராபுரத்தில் 10 ஆயிரத்திற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வென்றுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது. ஆளுங்கட்சியான தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகி ராமன், சிபிஎம் சார்பில் சுகந்தி ஆகியொோர் களமிறங்கி இருக்கின்றனர். அதேபோல் சுயேட்சைகள் உட்பட 27 பேர் போட்டியில் உள்ளனர்.
அதேபோல் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பாக சத்தியபாமா, திமுக சார்பாக சுகன்யா, அதிமுக சார்பாக பானுமதி, நாதக சார்பாக கார்த்திகா, சிபிஐ சார்பாக லட்சுமணன் மற்றும் சுயேட்சைகள் உட்பட 22 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இருப்பினும் 2 தொகுதிகளிலும் மும்முனைப் போட்டியே நிலவி வருகிறது. அக்டோபர் 6ல் நடந்த வாக்குப்பதிவில் மதுராந்தகம் தொகுதியில் 1,84,423 வாக்குகள் பதிவாகின. அதேபோல் தாராபுரம் தொகுதியில் 1,79,214 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் தொகுதியில் 86.26 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.25 சதவிகித வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது. மொத்தமாக 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளம். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னணி நிலவரங்கள் குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களும் திரள்வார்கள் என்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தவெக ஆட்சி அமைந்து 4 மாதங்களே ஆகி இருக்கும் சூழலில், இந்த இடைத்தேர்தலில் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மறுபக்கம் திமுக பலமான எதிர்க்கட்சி என்பதை காட்டவும், விஜய் மீது அதிருப்தி இருக்கிறது என்பதை நிரூபிக்க தீவிரமாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை 2 தொகுதிகளில் வென்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை பெற்றுள்ள நிலையில், திமுக நெருங்கி வருகிறது. அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. அதன்படி மதுராந்தகத்தில் தவெக 3,571 வாக்குகளும், திமுக 2,611 வாக்குகளும், அதிமுக 2,078 வாக்குகளும் பெற்றுள்ளன. தாராபுரத்தில் தவெக 1,237 வாக்குகளும், திமுக 632 வாக்குகளும், அதிமுக 524 வாக்குகளும் பெற்றுள்ளன. தற்போது 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தாராபுரம் தொகுதியில் தவெக 6,284 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர் பானுமதி 4,739 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 3,673 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். நாதக வேட்பாளர் கார்த்திகா 214 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் தவெக வேட்பாளர் சத்தியபாமா 1,545 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய சூழலில் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி 8,212 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் சத்தியபாமா 7,612 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 6,032 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். தாராபுரத்தில் திடர்ந்து தவெக பின்னடைவை சந்தித்திருக்கிறது. 600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது. அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 27,184 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 18,379 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 15,893 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். தவெக மற்றும் திமுக இடையில் 8,805 வாக்குகள் வித்தியாசம் இருக்கிறது. தாராபுரத்தில் 3வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமட்க்ஹி 9,308 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் சத்தியபாமா 8,977 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார். இதனால் அதிமுக மற்றும் தவெக இடையிலான வாக்கு வித்தியாசம் 331 வாக்குகளாக உள்ளது. அதேபோல் திமுக வேட்பாளர் சுகன்யா 7,098 வாக்குகளுடன் 3வது இடத்தில் இருந்தார் 5வது சுற்று முடிவுகளின் படி தாராபுரத்தில் தவெக மீண்டும் முன்னிலையை எட்டி இருக்கிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமா 21,034 வாக்குகள் பெற்று 1,304 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பானுமதி 19,730 வாக்குகளுடன் 2வது இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா 17,898 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும் இருக்கிறார். தற்போது மதியம் 12 மணி நேர நிலவரப்படி தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 31,327 வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் திமுக வேட்பாளர் சுகன்யா 25,841 வாக்குகள் பெற்று 2வது இடமும், அதிமுக வேட்பாளர் பானுமதி 24,363 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார். 14 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் சூழலில் தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 41,327 வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் திமுக வேட்பாளர் சுகன்யா 33,263 வாக்குகள் பெற்று 2வது இடமும், அதிமுக வேட்பாளர் பானுமதி 26,561 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி தாராபுரத்தில் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் தொடர்ச்சியாக சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் தவெக வென்றுள்ள நிலையில், திமுக 2வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் வென்ற அதிமுக, இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.