மறுபடியும் முதல்ல இருந்தா.. 2 தொகுதிகளில் இடைத் தேர்தல்! கண்காணிப்பு தீவிரம்! வணிகர்களே உஷார்!

  • சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ரூ.49 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வோர் உரிய ஆவணங்களை வைத்திருக்க அறிவுறுத்தல்கள் வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் என தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    Advertisement

    இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், தாராபுரம், மூலனூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்காக, தேர்தல் பறக்கும் படையினருடன் காவல் துறையினரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் இணைந்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் தொகுதியின் நுழைவுப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கும் வகையில், 2 போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தொடர்பாக, உரிய ஆவணங்கள் மற்றும் பணத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ரசீது மற்றும் ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.குறிப்பாக, ரூ.49 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் நிலையில், அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லப்பட்டால், தேர்தல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என வருவாய்த் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தாராபுரம் தொகுதியில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையும், கண்காணிப்புப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    English Summary

    Election flying squads intensify vehicle checks in Madurantakam and Dharapuram, warning traders to carry documents for cash above Rs 49,000.