கொத்து கொத்தாக கொலைகள் நடக்குது.. லண்டன் போறார் சிஎம்! தவெகவை தோற்கடிங்க.. ஸ்டாலின் வீடியோ

  • சென்னை: கொத்து கொத்தாக கொலைகள் நடக்கும் போது முதல்வர் விஜய் லண்டன் போயி கார் ரேஸ் பார்க்கிறார்.. ஆளுங்கட்சியோட ஆணவத்திற்கும், வேட்பாளர்களின் துரோகத்திற்கும் நீங்க சரியான பாடம் புகட்டினால் தான் மறுபடி நம் தமிழ்நாட்டில் தான் இந்த அநியாயம் நடக்காது என்று மு.க ஸ்டாலின் வீடியோ போட்டுள்ளார். மேலும் அவர், ஓட்டு போட போகும் போது மின் கட்டணத்தையும், மளிகை பில் கட்டணத்தையும் பார்த்துவிட்டு போய் ஓட்டு போடுங்க.. என்று கூறினார்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    மானமிக்க மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு வணக்கம். தேர்தல் முடிஞ்சு 4 மாதம் தான் ஆகுது. அதற்குள் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துவிட்டது. இந்த இடைத்தேர்தலுக்கு அவசியம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்.. இந்நேரம் எல்லா தொகுதிகளிலும் எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்கு எதாவது செய்துகொண்டு இருப்பார்கள். ஆனால் நீங்க தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்ன பண்ணியிருக்காங்க.. உங்க கிட்டயே மறுபடியும் ஓட்டு கேட்டு வந்து நிற்கிறாங்க..

    உங்களிடம் நடிக்கிறாங்க..

    அவர்களுடைய இந்த செயலில் எதாவது நியாயம் இருக்கா.. ஒரு துளியாவது உங்க நலன் இருக்கா. வாக்களிச்ச உங்க வேட்பாளரை விலை பேசி, ஆளுங்கட்சியினுடைய குதிரை பேரத்திற்கு துணை போனவருக்கு நீங்க என்ன பதிலடி கொடுக்க போறீங்க.. வாக்குக்காக உங்களை மறுபடியும் ஏமாற்றுவதற்காக அவங்க சொல்கிற கட்டுக்கதைகளையும், பொய்களையும் நம்ப போறீங்களா? உங்க தொகுதியில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடுகின்றவர்கள் பொட்டி வாங்கிக்கொண்டு உங்க கிட்ட என்ன சொல்றாங்க.. ஆளும் கட்சியில் சேர்ந்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்னு சொல்றாங்க அதுவா உண்மை.. உங்களிடம் நடிக்கிறாங்க..

    Advertisement

    ஆளும் கட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்னா, எல்லா ஆட்சியிலும், எதிர்க்கட்சியில் இருக்கிற எல்லா எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சி கூடவே போயிருக்க வேண்டுமே? எதிர்க்கட்சியினர் தொகுதியில் வேலை செய்யாமல் ஒரு அரசால் புறக்கணிக்க முடியாது என்பதை உங்களுக்கு தெரியாது என நினைத்து உங்களை ஏமாற்றுகிறார்களா?

    ஓட்டால் விரட்டி அடிங்க

    அடுத்து என்ன சொல்கிறார்கள்.. திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது என்று இல்லாத ஒரு பொய்யை சொல்லி, அவங்களை வளர்த்து ஆள் ஆக்கிய கட்சியை இல்லாமல் ஆக்க செய்வதற்கு ஆளும் கட்சி வேட்பாளர் செய்த துரோகம் தான் இந்த இடைத்தேர்தல். 2,500 ரூபாய் கொடுத்துவிட்டோம்.. 6 சிலிண்டர்கள் தந்துவிட்டோம் என்று சொல்லி ஆட்சி அமைக்கிறார்களா.. இல்லையே.. மக்களுக்கான, மக்களுக்கு நன்மை செய்ய கூடிய ஆட்சி இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்த சொன்னால் ஜோசியரோட அட்வைஸ் கேட்டுவிட்டு 1,200 கோடியில் தலைமை செயலகம் கட்ட பிளான் போடுகிறார்.

    Advertisement

    அரசு ஊழியர்கள், மீனவர்கள் போராடினால் அத பத்தி கவலைப்படாமல், லண்டன் போயி கார் ரேஸ் பார்க்கிறார். கொத்து கொத்தாக கொலைகள் நடந்தால், அதைப்பற்றி கவலைப்படாமல், சிங்கப்பெண் படைகள் என ரீல்ஸ் போடுவார்கள். இப்போதைக்கு அவர்களுடைய கவலை எல்லாம் ஆட்சியை காப்பாற்றுவதற்காக எம்.எல்.ஏக்களை எப்படி விலைக்கு வாங்குவது என்பதில் தான். எனவே பிரசாரத்திற்கு வந்த ஆளும் கட்சி வேட்பாளர்களை ஊருக்குள் வரமுடியாமல் விரட்டி அடித்தீர்களோ? அதே மாதிரி வரும் 6 ஆம் தேதி ஓட்டு போட்டு, ஓட்டால் தோல்வி கொடுத்து விரட்டி அடியுங்கள்.

    மின் கட்டணத்தை பார்த்துவிட்டு ஓட்டு போடுங்க..

    மக்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், பொய்யான கதைகளை செய்தியாக்கி மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் தவெகவுக்கு இந்த தேர்தலில் நீங்க ஏமாற்றத்தை தரனும். ஆளுங்கட்சியோட ஆணவத்திற்கும், வேட்பாளர்களின் துரோகத்திற்கும் நீங்க சரியான பாடம் புகட்டினால் தான் மறுபடி நம் தமிழ்நாட்டில் தான் இந்த அநியாயம் நடக்காது. உங்க தொகுதியின் வளர்ச்சிக்காக திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனுக்கு வாக்களித்து பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். ஓட்டு போட போகும் போது மின் கட்டணத்தையும், மளிகை பில் கட்டணத்தையும் பார்த்துவிட்டு போய் ஓட்டு போடுங்க.. என்று கூறினார்.

    English Summary

    MK Stalin released a video stating that while a spate of murders is taking place, Chief Minister Vijay has gone to London to watch a car race. He emphasized that only by teaching a fitting lesson for the ruling party's arrogance and the candidates' betrayal can such injustices be prevented from recurring in Tamil Nadu. He further urged people to check their electricity and grocery bills before heading out to cast their votes.