பாமக ஆதரவு இருக்குமா? தாராபுரத்தில் அதிமுக, மதுராந்தகத்தில் திமுக.. ராதாகிருஷ்ணன் சொன்ன மேட்டர்!

  • சென்னை: தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவருக்கும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் திமுகவில் பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோருக்கும், அதிமுகவில் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது. நாதக மட்டுமே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த 4 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் சூழலில், தவெகவுக்கு இது மிகமுக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதேபோல் 2 தொகுதிகளிலும் அதிமுக வென்றுள்ள சூழலில், மீண்டும் வெற்றியை வசப்படுத்தினால் அது அந்த கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். திமுகவை பொறுத்தவரை இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும், தவெக தோல்வி அடைந்தால் அது உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய நம்பிக்கையை கட்சியினருக்கு அளிக்கும் என்று கருதுகிறது.

    இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை இடைத்தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு தான் சாதகமாக இருக்கும். ஆனால் இம்முறை அப்படி கிடையாது. தவெகவுக்கு களத்தில் இன்னும் கட்டமைப்பு உருவாகவில்லை. தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் இன்னும் பெரிய அடையாளம் கிடையாது.

    Advertisement

    அதனால் ஒரு சமமான போட்டி இருப்பதாக பார்க்கிறேன். மதுராந்தகத்தில் கடந்த முறை திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் இம்முறை பாமக எந்த அளவிற்கு அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. புத்துயிர் பெற்ற திமுக இருக்கிறது. அதனால் மதுராந்தகத்தில் திமுக கடுமையான போட்டியை தவெகவுக்கு அளிக்கும் என்று பார்க்கிறேன்.

    ஆனால் தாராபுரத்தில் நிலைமையே வேறு. அதிமுகவின் உடுமலை ராதாகிருஷ்ணனை தூக்கிவிட்டு சிவசாமியை மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதனால் உடுமலை ராதாகிருஷ்ணன் தவெக பக்கம் வந்துவிட்டார். ஆனால் அவருடன் 5 ஒன்றியங்களில் உள்ள அதிமுகவில் இருந்து யாருமே தவெக பக்கம் வரவில்லை. அதிமுக வலுவாக இருக்கும் பகுதி அது.

    Advertisement

    எம்.சி.சம்பத்தை அலட்சியப்படுத்தியதை போல் உடுமலை ராதாகிருஷ்ணனையும் தவெக அலட்சியப்படுத்துகிறது. இதனால் தாராபுரத்தில் சமமான போட்டி நிலவி வருகிறது. பழனி, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, தாராபுரம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தவெக பெரிதாக வெல்லவில்லை. அதற்கு விஜய் பிரச்சாரம் செய்யாததும் ஒரு காரணம்.

    அதேபோல் 2 தொகுதி இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் மிக தெளிவாக 5 தொகுதி இடைத்தேர்தலை நடத்தவில்லை. இந்த தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வெளிவரவில்லை என்று கூறியுள்ளார்.

    English Summary

    Bypoll: Senior Journalist RK Radhakrishnan prediction of the Dharapuram and Madurantagam bypoll