கரை வேட்டி டூ காக்கி பேன்ட்! விஜய்யை இம்ப்ரஸ் செய்ய விஜயபாஸ்கர் என்ன செய்திருக்கிறார் பாருங்க!

  • சென்னை: தவெக இணைப்பு விழாவுக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதல்வர் விஜய் முன்பு பிரச்சாரங்களில் அணிவது போல் காக்கி பேன்ட் அணிந்து வந்தது தவெகவினர் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    தமிழக அரசியலில் இப்போது எங்கு பார்த்தாலும் 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) பற்றிய பேச்சுதான். அதிலும் குறிப்பாக, இன்று நடைபெற்ற தவெக இணைப்பு விழா, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த விழாவில் அனைவரது பார்வையும் ஒருவர் மீது மட்டும் தான் நிலைத்து நின்றது. அவர் வேறு யாருமல்ல, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்!

    அதிமுகவில் இருந்தவரை, எப்போதும் மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை, பளபளக்கும் வேட்டி என பக்கா 'அரசியல்வாதி' லுக்கிலேயே நாம் விஜயபாஸ்கரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று தவெக மேடையில் அவர் ஏறியபோது தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம். காரணம், அவரது அதிரடி உடை மாற்றம்!

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 'சிக்னேச்சர்' ஸ்டைலான வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்து, அப்படியே ஒரு 'மாடர்ன்' அரசியல்வாதியாக காட்சியளித்தார் விஜயபாஸ்கர்.

    Advertisement

    "விஜய் ஸ்டைலிலேயே வந்துட்டாரே!" என அங்கிருந்த தொண்டர்கள் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது. கரை வேட்டியைத் துறந்து, பேன்ட் - ஷர்ட்டுக்கு மாறிய விஜயபாஸ்கரின் இந்த 'மேக் ஓவர்' சமூக வலைதளங்களில் இப்போது செம ட்ரெண்டிங்!

    மேடையில் விஜயபாஸ்கர் பேசியது என்ன?

    இணைப்பு விழாவில் பேசிய விஜயபாஸ்கர், தனது புதிய அரசியல் பயணம் குறித்து உற்சாகமாகப் பேசினார். அவர் பேசியதாவது:

    "தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கத் துடிக்கும் தம்பி விஜய்யின் கரத்தை வலுப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு தவெக ஒரு சிறந்த களம்.

    Advertisement

    தலைவர் விஜய்யின் கொள்கைகளும், அவரது தொலைநோக்குப் பார்வையும் என்னை ஈர்த்துள்ளன. இனி வரும் காலங்களில், தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்காக ஒரு சாதாரணத் தொண்டனாக இருந்து என் பணியைத் தொடருவேன்.

    இனி எல்லா தேர்தல்களிலும் தவெகவே வெல்லும். மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் இரவு 10 மணிக்கு அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது எங்களால் ஏற்கமுடியவில்லை. அதனால்தான் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்தோம்" என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

    தொடருமா இந்த 'மாடர்ன்' பயணம்?

    விஜயபாஸ்கரின் இந்த திடீர் உடை மாற்றம் தற்காலிகமானதா அல்லது இனி வரும் காலங்களில் இதே 'மாடர்ன்' ஸ்டைலிலேயே அவர் பயணிப்பாரா? என்பதுதான் இப்போது அரசியல் விமர்சகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

    Advertisement

    அதிமுகவின் பாரம்பரிய வேட்டி கலாச்சாரத்திலிருந்து விலகி, விஜய்யின் பாணியைப் பின்பற்றுவது, அவர் முழுமையாக தவெகவின் கொள்கைகளுக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதைக் காட்டுகிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். எது எப்படியோ, விஜயபாஸ்கரின் இந்த 'புது அவதாரம்' தவெக தொண்டர்களுக்குப் புது தெம்பைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை!

    English Summary

    C. Vijayabaskar drew enthusiastic cheers from TVK supporters after arriving in khaki pants resembling Chief Minister Vijay's campaign dress.