சாதாரண சண்டைக்கெல்லாம் விவாகரத்தா? நீதிபதி தந்த சூப்பர் தீர்ப்பு.. நாக்பூரில் பயங்கர ட்விஸ்ட்

  • சென்னை: "திருமண உறவில் அடிக்கடி நடக்கும் சாதாரண வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் மன ரீதியான கொடுமை என்று வகைப்படுத்த முடியாது.. இதை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்தும் கோர முடியாது" என்று மும்பை ஹைகோர்ட் நாக்பூர் கிளை அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி பல்கே மற்றும் ராஜ் வாகோட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது... என்ன நடந்தது?!

    Advertisement

    மராட்டியத்தை சேர்ந்த அந்த நபருக்கு 44 வயதாகிறது.. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன், கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் நாளடைவில் கருத்து வேறுபாடு வந்துவிட்டது.

    Advertisement

    இதனால், கணவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்ததுடன், மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 5000 பராமரிப்புத் தொகையாக வழங்கவும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கணவர், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    டைவர்ஸ் மனு

    அவர் தனது மனுவில், "என்னுடைய மனைவி கோபமான சுபாவம் கொண்டவர்.. தன்னுடைய அம்மாவுடன்கூட தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார். சாதாரண விஷயத்துக்குகூட கோபம் வந்து சண்டை போடுவார்.. எனக்கு மனரீதியான கொடுமை தந்தார்.. நாக்பூருக்குக் குடியேற அவர்தான் என்னை டார்ச்சர் செய்தார்.. குழந்தை இல்லாமை குறித்து குறை சொல்ல கொண்டே இருந்தார்" என்று தெரிவித்திரந்தார்.

    Advertisement

    மறுபுறம் மனைவி தரப்பில், "கணவரும் அவரது குடும்பத்தினரும் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தினார்கள்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

    இதுகுறித்த விசாரணையும் நடந்தது.. அப்போது கடந்த 2012 முதலே, கணவர் தன்னுடைய மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது தெரியவந்தது. காவல்துறை முன்னிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்த கணவர், பிறகு அதிலிருந்து பின்வாங்கி வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டாராம்..

    சின்ன சின்ன சண்டைகள்

    அதுமட்டுமல்லாமல், மனைவி கணவரின் பெற்றோரை கவனித்துக்கொண்டதுடன், அலுவலகம் செல்லும் கணவருக்கு நிதி மற்றும் தார்மீக ரீதியாகவும் ஆதரவாக இருந்ததும் விசாரணையின்போது அம்பலமானது.

    Advertisement

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கணவர் தனது குற்றச்சாட்டுகளை சட்டப்படி நிரூபிக்க தவறிவிட்டார்.. கால மாற்றத்திற்கு ஏற்ப திருமண பந்தத்தின் பொறுப்புகளும் மாறியுள்ளன..

    எந்தவொரு இல்லற வாழ்க்கையிலும் சாதாரண சின்னச் சின்ன சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது சகஜம்தான்.. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் வெறும் எரிச்சலூட்டும் சம்பவங்களை மனரீதியான சித்ரவதை என்று கூறிவிட முடியாது.. அவை மனித நடத்தையில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள்தான். இதுபோன்ற சின்ன சின்ன சண்டைகள் விவாகரத்துக்கான அடிப்படை ஆகாது.

    தள்ளுபடி செய்து உத்தரவு

    சட்டப்படி விவாகரத்து வழங்கவேண்டுமானால், அந்த கொடுமையானது தம்பதிகள் 2 பேருமே இனி ஒன்றாகச் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.. ஓரிரு தனிப்பட்ட சம்பவங்களை வைத்து மனரீதியான கொடுமையாக தீர்மானிக்க முடியாது.. ஒட்டுமொத்த திருமண வாழ்க்கையையும், அந்தந்த சூழலையும் ஆராய்ந்துதான் விவாகரத்து வழங்கமுடியும்" என்று கூறிய நீதிபதிகள், கணவரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

    Advertisement

    அத்துடன் கீழ் நீதிமன்றத்தின் மூலம் மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய மாதம் ரூ. 5,000 ஜீவனாம்ச தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.. நீதிபதிகள் தம்பதிகளுக்கு விவாகரத்து தர மறுத்து, ஆலோசனைகளையும், அட்வைஸகளையும் தந்துள்ளது பலரின் கவனத்தை பெற்று வருகிறது...!!

    English Summary

    Can Everyday Marital Fights Be Called Mental Cruelty? High Court Gives Key Verdict.. Nagpur Divorce Case