ஆபரேஷன் செய்துக்கிட்டா பெண்ணாகிட முடியுமா? BNS 69 சட்டப்பிரிவு தெரியுமா? ஹைகோர்ட் கொடுத்த விளக்கம்

  • சென்னை: திருமணம் செய்வதாக சொல்லி ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக திருநங்கை ஒருவர் புகார் கொடுத்தார்.. இந்த வழக்கில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருநங்கையை BNS சட்டப்படி பெண் என்று கருத முடியுமா? இதற்கு அலகாபாத் ஹைகோர்ட் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த திருநங்கை ஒருவர், முகமது சாக்கிர் என்பவருடன் பழகி வந்தார். கடந்த 2023-ம் வருடம் ஏப்ரல் 11-ம் தேதி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், தான் திருநங்கை என்பதை சாக்கிரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.

    Advertisement

    ஆபரேஷன் செய்த திருநங்கை

    ஆனாலும், அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து சாக்கிர் பழகியிருக்கிறார். இப்படியே ஒன்றரை வருடத்துக்கும் மேலாக 2 பேரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

    இந்த காலகட்டத்தில் சாக்கிர், அப்பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கேட்டாராம்.. உடனே அந்த பெண்ணும் கொடுத்துள்ளார். ஆனால், அதன் பிறகு சாக்கிரின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது.. பெண்ணை திருமணம் செய்ய அவரும், அவரது குடும்பத்தினரும் மறுத்ததுடன், அந்த பெண்ணைத் திட்டி அனுப்பிவிட்டார்களாம்.. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் போலீசுக்கு போனார்..

    திருமண வாக்குறுதி

    இதுகுறித்து புகாரும் தந்தார்.. இந்த புகாரின்பேரில், திருமண வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 69-வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

    Advertisement

    BNS சட்டத்தின் 69-வது பிரிவு என்றால் என்ன தெரியுமா? BNS அதாவது Bharatiya Nyaya Sanhita என்பது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டம். இது பழைய இந்திய தண்டனை சட்டமான IPC-க்கு மாற்றாக 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது... திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லாமல் வாக்குறுதி கொடுத்து, வஞ்சகமாக உடலுறவு கொண்டால் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குற்றமாகும்.. இதைதான் BNS சட்டத்தின் 69-வது பிரிவு கூறுகிறது. இதற்கு அதிகபட்சம் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

    பாலின சமத்துவ நடைக்கு அனுமதி மறுப்பு..ஹேப்பி ஸ்ட்ரீட் மட்டும் அனுமதியா? சிபிஎம் பாலகிருஷ்ணன் கண்டனம்
    Advertisement

    பாலின மாற்று அறுவை சிகிச்சை

    ஆனால், இந்தப் பிரிவு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டது பற்றி பேசுகிறது. அப்படியானால், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருநங்கை ஒருவரை இந்தச் சட்டத்தின்படி பெண் என்று கருத முடியுமா? இதுதான் இந்த வழக்கின் முக்கியமான சட்டச் சிக்கலாக உருவெடுத்துள்ளது..

    நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.. மருத்துவக் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய சாக்கிர் தரப்பு, புகாரளித்தவரை இந்த சட்டத்தின் கீழ் பெண்ணாகக் கருத முடியாது என்று வாதிட்டது...

    ஆனால் அரசு தரப்பிலோ, "பிறக்கும்போது ஆணாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட காரணத்தால் அவரை பெண் என்ற வரையறையிலிருந்து விலக்கக் கூடாது" என்று வாதிட்டது.

    Advertisement

    BNS சட்டத்தின் 69-வது பிரிவு

    இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் குமார் சிங் தேஷ்வால், கடந்த அக்டோபர் 15-ம் தேதி சாக்கிருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். BNS சட்டத்தின் கீழ் ஆண், பெண், திருநங்கை எனத் தனித்தனி வரையறைகள் இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், சட்டப்படி ஒருவர் திருநங்கையாகவே வகைப்படுத்தப்படுவார் என்றும், BNS 69-வது பிரிவில் வரும் "பெண்" என்ற சொல், அந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரையறையின்படியே பொருள் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் விளக்கியது.

    கர்நாடகாவில் 'ஸ்டிங் ஆபரேஷன்' புயல்! சித்தராமையாவுக்கு எதிராக.. சிவகுமாரின் சித்து விளையாட்டு?
    Advertisement

    நீதிமன்றம் தீர்ப்பு

    மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருந்தபோதும், அந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையில், சாக்கிருக்கு எதிராக BNS 69-வது பிரிவின் கீழ் முதற்கட்டமாகக் குற்றம் அமைவதாகத் தெரியவில்லை என்று கூறி ஜாமீன் வழங்கப்பட்டது.

    இருப்பினும், 2019ஆம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட சட்ட பாதுகாப்பு உள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

    English Summary

    Can Gender Change Surgery Make Someone a Woman? What Did the High Court Say on BNS 69?