சென்னை: பூமியில் மனித நாகரிகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்? மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் மனிதர்களால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடும் வகையில், 1,000 ஆண்டுக்கால மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித நாகரிகம் மிக பெரிய பேரழிவுகளை சந்தித்தாலும் அதில் இருந்து மீண்டும் மீண்டு, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நீடிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் இறங்கினர். இது குறித்து 1,000 ஆண்டுகளை உள்ளடக்கிய கம்யூட்டர் மாடல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆய்வு மனித நாகரிகம் எப்படி அழிவை சந்திக்கலாம், அதிலிருந்து மீண்டெழலாம், தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயல்படலாம் என்பது குறித்து பல்வேறு விஷயங்களை ஆராய்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் அளவும் வயதும் மிக பெரியதாக இருக்கும் நிலையில், இதுவரை வேறு எந்தவொரு மேம்பட்ட நாகரிகத்தின் அடையாளங்களையும் மனிதர்கள் கண்டறியாதது ஏன் என்ற கேள்வி ஃபெர்மி முரண்பாடு (Fermi Paradox) எனப்படுகிறது. இந்த கேள்வியை அடிப்படையாக கொண்டே ஆய்வு நடத்தப்படுகிறது. செலியா பிளாங்கோ தலைமையிலான ஆய்வாளர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஒரு நாகரிகத்தின் எதிர்காலம் தொடர்பாக 10 வெவ்வேறு சூழல்களை உருவாக்கினர். ஒவ்வொன்றுக்கும் 200 கணினி மாடல்கள் நடத்தப்பட்டன. ஒரு நாகரிகம் எவ்வளவு காலம் செயல்படுகிறது என்பதை அதன் 'டூட்டி சைக்கிள்' என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் உருவாக்கிய மாடல்களில் இந்த விகிதம் சுமார் 38 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மாறுபட்டது. ஒரு நாகரிகம் தனது வளங்களை முழுமையாக பயன்படுத்திவிடுவது அல்லது சுற்றுச்சூழல் பேரழிவு, சந்திப்பது வரை இந்த ஆய்வுகள் தொடர்ந்தன. பேரழிவுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் தொழில்நுட்பம், வளங்கள், மறுகட்டமைப்புக்கு தேவைப்படும் காலம் ஆகியவற்றை பொறுத்து சில நாகரிகங்கள் மீண்டும் வளர்ச்சியடைய முடிந்தது. ஒரு நாகரிகம் எவ்வளவு காலம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயல்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கிய பங்கு வகித்தன. அந்த நாகரிகம் தனது வளங்களை எவ்வளவு வேகமாக பயன்படுத்துகிறது என்பது முதலாவது காரணம். பேரழிவுக்கு பிறகு எவ்வளவு வளங்களை மீட்டெடுக்க முடிகிறது என்பது இரண்டாவது காரணம். இதன் அடிப்படையில் கிடைத்த முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தன. 'Golden Age', 'Out of Eden' என பெயரிடப்பட்ட இரண்டு நாகரிகம் ஆய்வு காலத்தில் ஒருமுறைகூட முற்றிலும் அழியவில்லை. அழிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. 'Ouroboros' என்ற நாகரிகம் மீண்டும் மீண்டும் சரிவையும் மறுமலர்ச்சியையும் சந்தித்தபோதிலும், சுமார் 87 சதவீத காலம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயல்பட்டது. இப்படி ஒவ்வொரு நாகரிகமும் ஒவ்வொரு மாதிரி இருந்துள்ளது. வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதும், முக்கியமான அறிவையும் தொழில்நுட்பத்தையும் பாதுகாப்பதும் நாகரிகம் நீண்ட காலம் நிலைத்திருக்க உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயம், மருத்துவம், எரிசக்தி, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் அடிப்படை தகவல்களை பாதுகாக்கும் முறையை உருவாக்குவது ஒரு முக்கிய யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்காலத்தில் பேரழிவு ஏற்பட்டு, அனைத்துமே அழிந்து போகும்போது அப்போது தப்பி பிழைத்து இருப்போர் மீண்டும் இந்த தகவல்கள் வைத்து சமூகத்தை உருவாக்கலாம். உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விதைகளை பாதுகாக்கும் ஸ்வால்பார்டு உலகளாவிய விதை கிடங்கு இதற்கு ஓர் உதாரணம்!மனித நாகரிகம்
டூட்டி சைக்கிள்
பல நாகரீகங்கள்
அதுவரை மனிதகுலம் இருந்தால்.. மிகப்பெரிய வார்னிங் தந்த எலான் மஸ்க்.. என்ன இப்படி சொல்லிட்டாரே!
ரொம்பவே முக்கியம்