வரிகளை உயர்த்தாமலே ரூ.1.20 லட்சம் கோடி.. தமிழக அரசுக்கு வந்த சூப்பர் வாய்ப்பு.. எப்படி தெரியுமா?

  • சென்னை: புதிய வரிகளை விதிக்காமலும், கூடுதல் கடன் பெறாமலும் தமிழக அரசால் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமான கூடுதல் நிதி வசதியை உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு ஒரு ஆய்வு முக்கியமான வழிகளை சுட்டிக்காட்டியுள்ளது...

    Advertisement

    வருவாய் வசூலை மேம்படுத்துவது மற்றும் அரசு செலவுகளை சரியாக நிர்வகிப்பதன் .மூலம், இதை சாத்தியமாக்க முடியும் என்று "கியர்னி" ஆய்வில் தெரியவந்துள்ளது.. அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    Advertisement

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனத்தின் பெயர் கியர்னி.. இந்த நிறுவனம், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பாக, சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது..

    அந்த ஆய்வில், மாநிலத்தின் வருவாயை மேலும் உயர்த்தக்கூடிய பல்வேறு துறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    குறிப்பாக தமிழகத்தில் தனிநபர் மாத செலவினம் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் இன்னும் குறைவாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இது குறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    Advertisement

    - தமிழக அரசு ஆண்டுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கூடுதல் நிதி வசதியை உருவாக்க வாய்ப்புள்ளது

    - தமிழகத்தின் தனிநபர் மாத செலவினம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. ஆனால், மாநில மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் இன்னும் குறைவாக உள்ளது

    - தமிழக பொருளாதாரத்தில், சேவை துறையின் பங்கு, 53.60 சதவீதமாக உள்ளது. ஆனால், மாநிலத்தின் ஜி.எஸ்.டி., வசூலில், சேவை துறையின் பங்கு, 37.80 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது.

    - வரி வரம்புக்குள் வரும் சேவைகளை முறையாக கண்காணித்து, ஜி.எஸ்.டி., வசூலை மேம்படுத்த வேண்டும்

    Advertisement

    - மதுபான விற்பனையில், விலை அடிப்படையில் மாறுபட்ட கலால் வரியை நிர்ணயிப்பது, டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விற்பனையை முழுமையாக கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகள் வாயிலா கவும் வருவாயை அதிகரிக்கலாம்

    - பத்திரப்பதிவு மற்றும் முத்திரை தீர்வை வருவாயை உயர்த்த, வழிகாட்டி மதிப்பை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும்

    - 2025-26ல் இந்த வருவாய் தமிழகத்தின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 0.72 சதவீதமாக இருந்த நிலையில், மஹாராஷ்டிராவில், 1.33 சதவீதமாக இருந்தது

    - சுரங்கங்களில் எடுக்கப்படும் கனிமத்தின் அளவையும், அதற்கான ராயல்டி வசூலையும் துல்லியமாக கண்காணிப்பது மற்றும் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய நிதியை முழுமையாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்

    Advertisement

    - வருவாய் வசூலை மேம்படுத்தி, செலவுகளுக்கு சரியான முன்னுரிமை அளித்து செயல்பட்டால், வளர்ச்சி, நலத் திட்டங்கள் மற்றும் நிதி நிர்வாகம் ஆகிய மூன்றையும், ஒரே நேரத்தில் முன்னெடுக்கத் தேவையான வசதியை உருவாக்க முடியும். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு மட்டும் வந்துவிட்டால், நம்முடைய தமிழக அரசுக்கு வருடத்துக்கு ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமான கூடுதல் நிதி வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை தடையின்றி தொடரவும், புதிய வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் இது உதவியாக இருக்கும். புதிய வரிகளை அதிகமாக விதிக்காமல் வருவாயை பெருக்கும் வாய்ப்பும், அரசின் கடன் தேவையை கட்டுப்படுத்தும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்...!!!

    English Summary

    Can the Tamil Nadu Government Raise More Revenue Without Increasing Taxes? ₹1.20 Lakh Crore Opportunity