கொளத்தூரில் விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்த வழக்கு.. ஸ்டாலின் தரப்பு கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்

  • சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, மு.க ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளது.

    Advertisement

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    Advertisement

    சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

    விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களையும், வாக்குக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்களையும், திமுகவைச் சேர்ந்த மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ தலைமையிலான வக்கீல்கள் அணி ஆய்வு செய்தது. அப்போது அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    எனவே, வி.எஸ். பாபு வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் முன்பு மு.க ஸ்டாலின் தரப்பில் மூத்த வக்கீல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி இன்று முறையிட்டார்.

    Advertisement

    நிராகரித்து உயர் நீதிமன்றம்

    ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ''வழக்கை அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர். முன்னதாக கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தில் திமுக வைத்த கோரிக்கை அடிப்படையில் இந்த இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் நடந்தது.

    மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் எந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்களும் பங்கேற்று இருந்தனர். இதில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. 3 எந்திரங்கள் சரியாக இல்லை. மு.க ஸ்டாலினின் அறிவுறைப்படி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறியிருந்தார்.

    Advertisement

    மாநகராட்சி ஆணையர் விளக்கம்

    பூத் எண் 57 இல் உள்ள எந்திரங்களை சீல் வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க ஸ்டாலின் தரப்பில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆணையின் படி தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியானது செய்யப்பட்டது. இவிஎம் எந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆய்வு நடந்தது. இதில் எந்த குளறுபடியும் இல்லை. 100 சதவீதம் துல்லியமாக இருந்தது" என்று கூறியிருந்தார்.

    English Summary

    A petition has been filed in the Madras High Court on behalf of M.K. Stalin, seeking to declare the victory of TVK candidate VS Babu in the Kolathur constituency—during the recently concluded Assembly elections—as invalid. The court rejected the DMK's request to hear this matter as an urgent petition.